முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
469

1இ

1இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

    வாளி மழை பொழிந்த சிலையா - 2“அம்பு மழையைப் பெய்தாரன்றோ” என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி. திருமாமகள் கேள்வா - விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது. 3“கணவனைத் தழுவிக்கொண்டாள்” என்னுமவள். “தம் ஸதருஹந்தாரம் த்ருஷ்டவா - வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கவேண்டும்படியான அழகினையுடையவரை, எதிரிகளை வென்ற வீரக்கோலத்தோடே கண்டாள். ஸத்ருஹந்தாரம்-4தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கிவிடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை. 5முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார், இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ; இங்குப் பூசலுக்குப் புகுகிற

 

1. “ராமேண” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘இருத்திப் பிடித்த’
  என்று தொடங்கி. “ராமேண ஸரை: நிஹதம் த்ரஷ்டும் ந இச்சாமி”
  என்கையாலே, பலித்த பாவத்தை அருளிச்செய்கிறார் ‘அவ்வழகை’ என்று
  தொடங்கி.

2. “ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.

3. அப்படி அணைத்ததற்குப் பிரமாணமும், பிரமாணத்திற்குப் பொருளும்
  அருளிச்செய்கிறார் ‘கணவனை’ என்று தொடங்கி.

  “தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
   பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.

4. “சத்ரு ஹந்தாரம்” என்பதற்கு, எதிர்மறையில் பாவம் அருளிச்செய்கிறார்
  ‘தம் திருமேனியிலே’ என்று தொடங்கி.

5. “த்ருஷ்ட்வா” என்ற பதத்துக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘முன்பு
  திருவயோத்யையில்’ என்று தொடங்கி.