New Page 1
போதே பிடித்து மேலுள்ள
செயல்கள் அடங்கலும் கண்டாள். மஹர்ஷீணாம் ஸு காவஹம் -
இருடிகளுடைய விரோதிகளைப்போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை. 1தங்கள்
தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு முறை
உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு. 2கர்ப்ப பூதா: தபோதநா:-தந்தாம் கைம்முதல்
அழியமாறாதே இருக்குமவர்கள். தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது,
தந்தாமுக்கென்ன இயற்றி உண்டாயிருக்கச்செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை
அன்றோ; அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி. 3அநுகூலர்களை ரக்ஷித்தலும்
பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ. பபூவ - 4பதினாலாயிரம்
முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு அஞ்சி ‘இது என்னாய்
விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள். பூ - ஸத்தாயாம். ஹ்ருஷ்டா
- சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று. 5வைதேஹீ - உபாத்தியாயர்கள் பெண்பிள்ளைகளுக்குச்
செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும்
1. “ருஷீணாம்” என்ற பதத்திற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘தங்கள்’ என்று
தொடங்கி. என்றது, “ருஷி தர்ஸநே” என்பது, தாது
வாகையாவே
ஈசுவரனே ரக்ஷகன், நாம் ரக்ஷிக்கப்படும் பொருள் என்கிற
ஞானத்தையுடையவர்கள் என்றபடி.
2. அப்படி அவர்கள் அவனிடத்தில்
பாரத்தை வைத்தவர்களோ? என்ன,
ஆம் என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார் “கர்ப்ப பூதா:”
என்று
தொடங்கி. இது, ஸ்ரீராமா. ஆரண். 1 : 21. கர்ப்பபூதராய் - கர்ப்பத்தில்
இருப்பதைப்
போன்றவர்களாய். இயற்றி - முயற்சி.
வேண்டின வேண்டினர்க்
களிக்கு மெய்த்தவம்
பூண்டுள ராயினும்
பொறையி னாற்றலால்
மூண்டெழு வெகுளியை முதலில்
நீக்கினார்
ஆண்டுறை அரக்கரால்
அலைப்புண் டாரரோ.
என்பது, கம்பராமா. அகத்தியப்பட.
8.
3. இப்படிப் பாதுகாப்பது
யார்க்குப் பிரியமாக? என்னில், அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அநுகூலர்களை’ என்று தொடங்கி.
4. “ஸ்த்ரு ஹந்தாரம் த்ருஷ்ட்வா
பபூவ” என்று கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பதினாலாயிரம்’ என்று தொடங்கி. “பபூவ”
என்பது,
உளளாகையைக் காட்டுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பூ
- ஸத்தாயாம்’ என்று.
5. இவள்
வீரவாசி அறிகைக்குக் காரணம் யாது? என்ன, ‘வைதேஹீ,’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
|