1அங
1அங்குள்ளவை
எல்லாம் இனிய பொருள்களாகத் தோற்றுகிறபடி. திணர் ஆர் சார்ங்கத்து உனபாதம் - திண்மை
மிக்கிருந்துள்ள ஸ்ரீ சார்ங்கத்தையுடைய உன்னுடைய திருவடிகளை. 2“ரக்ஷகராய், சக்கரவர்த்தித்
திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன” என்கிறபடியே, ரக்ஷகமான திருவடிகளை. 3சக்கரவர்த்திப்
பிள்ளைகள் எடுக்குமத்தனை காணும் வில்லு. திணர் ஆர் சார்ங்கம் - 4தன் வளைவிலே
விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை. உனபாதம் - 5அந்த வளைவுக்கு
அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது. சேர்வது அடியேன் எந்நாளே - 6கையில்
வில் இருக்க இழக்கவேண்டா விரோதி உண்டு என்று; இனி உன்னைப்பெறும் நாளையாகிலும் சொல்லவேணும்.
(5)
657
எந்நாளே நாம் மண்ணளந்த
இணைத்தா மரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள்
ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால்
வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே!
மெய்ந்நாள் எய்தி
எந்நாள் உன்7 னடிகள் அடியேன் மேவுவதே?
பொ-ரை :- உலகத்தை அளந்த இரண்டு திருவடிகளைக் காண்பதற்கு
எந்த நாளையுடையோம் நாம் என்று தேவர்கள் கூட்டம்கூட்டமாக எப்
1. இது உத்தேசியமாகைக்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார்
‘அங்குள்ளவை’ என்று தொடங்கி.
2. “சார்ங்கத்து உன பாதம்”
என்று விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘ரக்ஷகராய்’ என்று தொடங்கி.
“ஸரண்யம் ஸரணம் யாதா
ராமம் தஸரதாத்மஜம்”
என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.
3. வில்லுக்குத் திண்மை
யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘சக்கரவர்த்திப் பிள்ளைகள்’ என்று தொடங்கி.
4. “திணர்” என்பதற்கு,
பாரம் என்று மேலே பொருள் அருளிச்செய்தார்.
‘மிடுக்கு’ என்று வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார்
‘தன்வளைவிலே’ என்று தொடங்கி.
5. ‘அந்த வளைவுக்கு அகப்படாதாரை’
என்றது, அநுகூலரை.
6. விரோதியைப் போக்கவேண்டும்
என்னாமல், “எந்நாளே” என்று சேரும்
காலத்தை வினவுவது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘கையில் வில்’ என்று தொடங்கி.
7. “அடிக்கண்”
என்பதும் பாடம்.
|