ஒன
ஒன்றனைப்பற்றிப்
போகிறவர்கள் அல்லராதலின் ‘எந்நாளும்’ என்கிறார்.
இமையோர்கள் இனம்
இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி - நித்தியசூரிகள் காலமெல்லாம் நின்று துதிசெய்து
பின்னைத் திருவடிகளிலே விழுந்து, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரள்திரளாய். மெய்ந் நா
மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் - 1மனம் வாக்குக் காயங்களாலே
அடைந்து அடிமை செய்யாநிற்பர்கள். அன்றியே, மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம்.
வழிபடுதலாவது, வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக்கொண்டு அடைந்து வணங்குதல்.
2நித்தியசூரிகளானபோது, கைங்கரியமாகக் கொள்க. பிரமன் முதலான தேவர்களானபோது, உபாசனமாகக்
கொள்க. மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே -3குணங்களின்
பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது; நான் உன் திருவடிகளைப் பத்தும்
பத்தாக வந்து கிட்டி, பின்னைப் பிரிவோடேகூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.
4ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.
(6)
658
அடியேன் மேவி அமர்கின்ற
அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே!
கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள்
தீர்மருந்தே! திருவேங் கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும்
உனபாதம் காண நோலா தாற்றேனே.
1. “மெய்” என்பதற்கு,
இருபொருள்: ஒன்று, சரீரம்; மற்றொன்று, உண்மை.
இவ்விருபொருள்களையும் முறையே அருளிச்செய்கிறார்
‘மனம் வாக்கு’
என்று தொடங்கி.
2. அவதாரிகையில்
அருளிச்செய்த இருவகையான கருத்துக்களுக்குத்
தகுதியாக “இமையோர்” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘நித்தியசூரிகளானபோது’ என்று தொடங்கி.
3. “நான் மெய் எய்தி”
என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘குணங்களின் பிரகாசத்தாலே” என்று தொடங்கி.
“மேவுவது” என்பதற்குப்
பொருள், ‘பின்னைப் பிரிவோடே’ என்று தொடங்கும் வாக்கியம்.
4.
“அடிகள்” என்ற பன்மைக்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘அடிவிடில்’
என்று தொடங்கி.
|