முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
480

New Page 1

போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி. 1இமையோர் அதிபதியாய், கொடியா அடுபுள் உடையானாய், செடியார் வினைகள் தீர்மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனிவாய்ப் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார். 2பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும்போது தோத்திரத்தை விண்ணப்பம்செய்வது’ என்று இருக்கின்றதே, என்ன தோத்திரத்தை விண்ணப்பம்செய்வது?” என்ன, “‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்பன போலே இருக்கும் திருப்பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச்செய்தார். நொடியார் பொழுதும் - நொடி நிறையும் அளவும். உன பாதம் காண நோலாது ஆற்றேன்-3உன் திருவடிகளைக் காண்கைக்கு ஒரு சாதன அநுஷ்டானம் செய்யாதிருக்க, கணநேரமும் ஆற்றமாட்டுகிறிலேன். என்றது, சாதனத்தைக் கண்ணழிவு அறச் செய்து பலம் தாழ்ப்பாரைம்போலே படாநின்றேன் என்றபடி. 4அது இல்லாமை அன்றோ இவர் இங்ஙனே கிடந்துபடுகிறது. தனியே ஒரு சாதனம் செய்யுமவனுக்கு, ‘அது முடிவு பெற்றவாறே பெறுகிறோம்’ என்றாதல், ‘அதிலே சில குறைவுகள் உண்டானமையால் அன்றோ பலம் தாழ்த்தது’ என்றாதல் ஆறி இருக்கலாம்; அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப்பாயாத படியானேனோ?’ என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.

(7)

 

1. பரத்துவத்தைச் சொல்லி, விரோதிகளை அழிப்பதற்கு உறுப்பான
  பரிகரத்தைச் சொல்லி, விரோதி நிரசனத்தைச் சொல்லி,
  சௌலப்யத்தைச்சொல்லி, அழகைச் சொல்லி, இனியனாய் இருக்கிறான்
  என்று சொல்லுகிறார் என்று இப்படி ஒரு கிரமம் சொல்லுகைக்காக
  அந்வயிக்கிறார் ‘இமையோர்’ என்று தொடங்கி.

2. ‘பட்டர்’ என்று தொடங்கும் வாக்கியம், பிராசங்கிகம். நித்தியத்திலே -
  உடையவரால் அருளிச்செய்யப்பட்ட நித்தியம் என்ற நூலிலே.

3. உனபாதம் காண நோலாதிருக்கச்செய்தேயும் இனிமையாலே நொடியார்
  பொழுதும் ஆற்றேன் என்கிறார் ‘உன் திருவடிகளை’ என்று தொடங்கி.
  அதனை விவரணம் செய்கிறார் ‘சாதனத்தைக் கண்ணழிவு அறச்செய்து’
  என்று தொடங்கி.

4. நோலாமையாலே காலதாமதத்திற்குக் காரணம் இல்லை; ஆகையாலே,
  ஆற்றேன் என்று வேறும் ஒருகருத்து அருளிச்செய்கிறார் ‘அது
  இல்லாமையன்றோ’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
  ‘தனியே ஒருசாதனம்’ என்று தொடங்கி.