1ஓர
1ஓர்
ஆழ்வார், ‘பிதிரும் மனம் இலேன் - பேதிக்கப்பட்ட நெஞ்சினையுடையேன் அல்லேன்; பிஞ்ஞகன்
தன்னோடு எதிர்வன் - 2சிவன் எனக்கு ஒத்தவன்; அவன் எனக்கு நேரான் - அவனும்
எனக்கு ஒத்தவன் அல்லன்; அது என்? என்னில், அதிரும் கழல் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக்
காதல் பூண்டேன் தொழில் - பகவத் விஷயத்தில் நெஞ்சை வைத்து அநுபவிக்கையே யாத்திரையான
எனக்கு, அந்யபரனானவன் ஒப்பாகப் போருமோ?’ 3‘குறைகொண்டு - தன் வெறுமையைக் கைதொடு
மானமாகக் கொண்டு, நான்முகன் குண்டிகைநீர் பெய்து - நினைவறத் திருவடி சென்று கிட்டிற்று,
உபகரணம் பெற்றிலன், தர்மதேவதையானது தண்ணீராய் வந்து தங்கிற்று, அதனைக்கொண்டு, மறைகொண்ட
மந்திரத்தால் வாழ்த்தி - வேதாந்தங்களில் பகவானுடைய பரத்துவத்தைச் சொல்லுகின்ற மந்திரங்களைக்
கொண்டு துதிசெய்து. கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் - அடக்கமில்லாமல்
செருக்குக்கொண்டு திரியும் பிள்ளைகள் தலைகளிலே ஸ்ரீ பாத தீர்த்தம்கொண்டு தெளிப்பாரைப்
போலே’. நுண் உணர்வில்-சத்துவம் தலையெடுத்தபோது 4சொல்லுவது இதுவே. சத்துவகுணத்தினால்
ஞானம் நன்கு உதிக்கின்றது என்பதே அன்றோ பிரமாணம். நீலார் கண்டத்து அம்மானும் - விஷத்தைக்
கண்டத்திலே தரிக்கையாலே ஈசுவரனாகத் தன்னை மதித்துக்கொண்டிருக்
1. உத்தேசியர் அல்லர்
என்பதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘ஓர் ஆழ்வார்’
என்று தொடங்கி ஓர் ஆழ்வார் - திருமழிசையாழ்வார்.
பிதிரு மனமில்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன்
எனக்கு நேரான் - அதிரும்
கழற்கால மன்னனையே
கண்ணனையே நாளும்
தொழக்காதல் பூண்டேன்
தொழில்.
என்பது, நான்முகன் திருவந்தாதி.
84.
2. ‘சிவன் எனக்கு ஒத்தவன்’
என்றது, ஞானத்தின் ஒப்புமையாலே என்றபடி.
‘அது என்? என்னில்,’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக்
கருத்து,
சர்வேசுவரனை ஏத்துதலையே நான் எப்பொழுதும் தொழிலாகக்
கொண்டேன்; ஆதலால், யாதாயினும்
ஒருகால விசேடத்திலே பகவத்
ஞானத்தையுடையனாயிருக்கிற சிவன் எனக்கு ஒப்புஆகான் என்பது.
அந்யபரன்
- வேறு ஒன்றில் நோக்குள்ளவன்.
3. சிவனும் இந்திரன் முதலான
தேவர்களும் வெறுமையை முன்னிட்டு
அடைந்ததற்குப் பிரமாணம் காட்டி, பிரமன் வெறுமையை முன்னிட்டு
ஆஸ்ரயித்தற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘குறைகொண்டு’ என்று
தொடங்கி. இது, நான்முகன் திருவந்.
9. கைதொடுமானம் - சகாயம்.
4.
‘சொல்லுவது இதுவே’ என்றது, “தோலாதாற்றேன்” என்னும் வார்த்தையை.
|