வந
வந்து நிற்கிறானாதலின்,
‘திருவேங்கடத்தானே’ என்கிறார். மாலாய் மயக்கி - 1“மயங்கல் கூடலும்
கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும், அன்றிக்கே,
மாலாம்படி மயக்கிக்கொண்டு வரவேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்; அவை அல்ல பொருள்.
மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய், கிருஷ்ணனாய்க் கொண்டு உன்
குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக்கொண்டு வந்தாற்
போலே எனக்காகவும் ஒருவரத்து வரவேணும் என்கிறார்; 3“மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.
(8)
660.
வந்தாய் போலே
வாராதாய்! வாரா தாய்போல் வருவானே!
செந்தா மரைக்கட் செங்கனிவாய்
நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள்
பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம்
அகல கில்லேன் இறையுமே.
பொ-ரை :- வந்தவனைப் போன்றிருந்து வாராமல் இருப்பவனே!
வாராதவனைப் போன்றிருந்து வருகின்றவனே! செய்தாமரைமலர் போன்ற திருக்கண்களையும் சிவந்த
கோவைக்கனிபோன்ற திருவாயினையும் நான்கு திருத்தோள்களையுமுடைய அமுதம் போன்றவனே! என் உயிரானவனே!
சிந்தாமணி என்னும் இரத்தினங்களின் ஒளியானது இருட்டினை நீக்கிப் பகலாகச் செய்கின்ற திருவேங்கடத்தில்
எழுந்தருளியிருக்கின்றவனே! ஐயோ! அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சிறிது பொழுதும் நீங்கமாட்டுகின்றிலேன்.
வி-கு :-
சிந்தாமணி - ஒருவகை இரத்தினம். பகர் - ஒளி.
அல் - இருள். இறையும் அகலகில்லேன் என்க. இறை - சிறிதுபொழுது.
1. “மயக்கி” என்பதற்குப்
பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றித்
தாம் கூறும் பொருளுக்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘மயங்கல் கூடலும்
கலவியும்’ என்று.
2. மேலேகூறிய இருவகையான
கருத்துக்களிலும் “வந்தாய் போலே”
என்பதற்குப் பொருள் இல்லையாதலின் ‘அவை அல்ல பொருள்’
என்கிறார்.
3. அப்படிப்
பிச்சு ஏற்றிக்கொண்டு வந்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘மாலாய்’ என்று தொடங்கி. இது நாய்ச்சியார்
திருமொழி, 14 : 3. மாலே
செய்யும் மணாளனை - தன் வியாமோகத்தைக் காட்டி இத்தலைக்கு
வியாமோகத்தை விளைக்குமவனை. மாலாய் - கிருஷ்ணனாய்.
|