ஈ
ஈடு :-
ஒன்பதாம் பாட்டு. 1தாம் விரும்பியபோதே
காணப் பெறாமையாலே இப்போதே உன்னைக் காணாவிடில் தரிக்க மாட்டேன் என்கிறார்.
வந்தாய்போலே
வாராதாய் - 2மானச அநுபவத்தில் உண்டான கரைபுரட்சிதான் ‘புறத்திலே கலவியும் பெற்றோம்’
என்று கொண்டு மனநிறைவு பிறக்கும்படியாய், அதனை ‘மெய்’ என்று அணைக்கக் கணிசித்தால் கைக்கு
எட்டாதபடியாயிருக்கை. வாராதாய் போல் வருவானே - ஒரு நாளும் கிட்டமாட்டோம் என்று இருக்கச்
செய்தே கடுகக் கைப்புகுந்து கொடு நிற்கும் என்கை. அன்றிக்கே, அடியர் அல்லாதார் திறத்தில்
‘கைப் புகுந்தான்’ என்று தோற்றி இருக்கச் செய்தே புறம்பாய், அடியார்கட்கு ‘இவன் கிட்ட அரியன்’
என்று இருக்கச்செய்தே உட்புகுந்து இருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம். செந்தாமரைக்கண் செம்கனிவாய்
நால்தோள். அமுதே - 3தாபங்கள் எல்லாம் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களையுடையவனுமாய்,
சிவந்த கனிந்திருந்துள்ள திருவதரத்தையுடையனுமாய், கல்பகதரு பணைத்தாற்போலே இருக்கிற நான்கு
திருத்தோள்களையுடையனுமாய் இனியனு மானவனே! எனது உயிரே - 4இந்த வடிவழகை என்னை
அநுபவிப்பித்து, பிரிந்த நிலையில் நான் உளன் ஆகாதபடி செய்தவனே!
சிந்தாமணிகள்
பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே - விலக்ஷணமான இரத்தினங்களினுடைய ஒளியானது அல்லைப்
பகல் செய்யாநின்றதாயிற்று; என்றது, இரவு பகல் என்ற வேறுபாட்டினை அறுத்துக்கொண்டிருக்கையைத்
தெரிவித்தபடி. 5“மணிகளின் ஒளியால் விடிபகல் இரவு என்றறிவரிதாய” என்னக்
கடவதன்றோ. இதனால்
1. “இறையும் அகலகில்லேன்”
என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. “வந்தாய்போலே” என்றதற்கும்,
“வாராதாய்” என்றதற்கும் பொருந்தப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘மானச அநுபவத்தில்’ என்று தொடங்கி.
3. “செந்தாமரை” என்று
விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘தாபங்கள் எல்லாம்” என்று தொடங்கி.
4. உயிரானபடியை அருளிச்செய்கிறார்
‘இந்த வடிவழகை’ என்று தொடங்கி.
5. ‘மணிகளின் ஒளியால்’
என்பது, பெரியதிருமொழி, 4. 10 : 8.
6. “சிந்தாமணிகள்
பகர் அல்லை பகல்செய்” என்றதனால், பலித்த
பொருளை அருளிச்செய்கிறார் ‘இதனால் நினைக்கிறது’
என்று தொடங்கி.
|