முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
49

மாயன்தன்னை - அடியார்கட்கு விரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண்பாராத ஆச்சரியத்தையுடையவனை. கண்ணனை-அடியார்கட்குத் தான் கையாளாக நின்று தன்னைக் கொடுக்குமவனை. நெடுமாலை - இத்தனையும் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தையுடையவனை. அன்றிக்கே, கடிய மாயன் - தன்னைப் பிரிந்தார் படும் நோவறியாத கொடுமையையுடையவனை. கண்ணனை நெடுமாலை - எளிமை ஒரு காலவிசேஷத்தில் உள்ளது, முதன்மையே கண்டீர் பெருத்திருப்பது 1இனி, எளியனானதுவும் வேண்டிச் செய்தான் அல்லன், இத்தலையை நலிகைக்காகச் செய்த செயல் கண்டீர் என்று அருளிச்செய்வர் பட்டர்.

   
கொடிய வல்வினையேன் - 2நாட்டார் படி அல்லாத பாபத்தைச் செய்தேன். அல்லாதாருடைய பாபங்கள் பகவானை அடைதலாலே போமன்றோ, அடைதல்தான் பாதகமாம்படியான பாவத்தைச் செய்தேன். திறம் - 3ஒரு மஹாபாரதம் அன்றோ. வேறுகொண்டு கூறுமின் - செவிப்படாதபடி ஓலக்கத்திலே சொல்லாமல் ஏகாந்தத்திலே சொல்லுங்கோள். அதாவது, அவனும் அவளுமாயிருந்த இடத்திலே சொல்லுங்கோள் என்றபடி. என்றது, 4‘என் திருமார்வற்கு என்னை’ என்றும், ‘திருமாலார்க்கு என் பிழைத்தாள்’ என்றும், ‘மாதரைத்

 

1. ஒரு கால விசேடத்திலேயானாலும் பவ்யதை உண்டே? எனின், அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இனி எளியனானதுவும்’ என்று தொடங்கி.

2. “கொடிய வல்வினையேன்” என்று விசேடித்ததற்கு, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’ என்று தொடங்கி. அதனை விவரணம்
   செய்கிறார் ‘அல்லாதாருடைய’ என்று தொடங்கி.

3. “திறம்” என்பதற்கு, அவதாரிகையில் அருளிச்செய்த பொருளைத் தவிர,
   வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘ஒரு மஹா பாரதமன்றோ’
   என்று. திறம் - (வியசனங்களின்) கூட்டம்.

4. ‘ஏகாந்தமான இடம்’ என்றால், பெருமானும் பிராட்டியும் சேர்ந்திருக்கும்
  சேர்த்தி இடத்திலே என்று பொருள்படுமோ? என்ன, தூதுவிடுகின்ற மூன்று
  திருப்பதிகங்களிலும் பிராட்டியினுடைய சேர்த்தியை வெளிப்படையாகச்
  சொல்லுகையாலே இங்கும் அப்பொருள்தன்னையே கோடல் வேண்டும்
  என்கிறார் ‘என் திருமார்வற்கு’ என்று தொடங்கி. இது, திருவாய்மொழி,
  6. 8 : 10. “திருமாலார்க்கு என் பிழைத்தாள்” என்பது, திருவாய். 1. 4 : 7.
  “மாதரைத் தம்” என்பது, திருவாய். 9. 7 : 6.