பதங
பதங்களோடு ஒக்க யோஜித்துத்
தலைக்கட்டக்கடவது. 1அதில் அர்த்தத்தால் பொதருகின்ற ‘அஹம்’ என்ற
சொல்லின்பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.
அகலகில்லேன்
இறையும் என்று - 2இது, அகன்று இருந்து சொல்லுகிற பாசுரமும் அன்று; எப்பொழுதும் கூடியிருக்கச்செய்தேயாயிற்று
‘இறையும் அகலகில்லேன், இறையும் அகலகில்லேன்’ என்று உரைப்பது. 3நித்தியாநுபவம்
பண்ணுவார்க்கு எல்லாம் பாசுரம் இதுவே. 4நாட்டாருடைய அகலகில்லேன் போல் அன்று,
இவளுடைய அகலகில்லேன்; அது கர்மங் காரணமாக வருவது; இது விஷயங் காரணமாக விளையுமது. அலர்மேல்மங்கை
-5அவனை, “பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்கமாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும்
பருவத்தையுமுடையவள். 6பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை. உறை
திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்
“சரணம்” என்ற சொல் கோல்விழுக்காட்டாலே வருவது ஒன்றாம்
ஆதலின்,
தனியே கூறிற்றிலர் என்க. இப்பொருள் தன்னையே விவரணம்
செய்கிறார் ‘“அகலகில்லேன் இறையும்”
என்று’ என்றது முதல்
‘பதத்தோடே சேரக்கடவனவாம்’ என்றது முடிய.
1. அந்தத் துவயத்தைக் காட்டிலும்
இதற்கு வாசி அருளிச்செய்கிறார் ‘அதில்’
என்று தொடங்கி. என்றது, துவயத்தில் உள்ள “பிரபத்யே”
என்ற
தன்மை ஒருமைவினையால் போதருகின்ற ‘அகம்’ என்ற சொல்லின்
பொருளான ‘அதிகாரி சொரூபத்தை’
என்றபடி.
2. “அகலகில்லேன்” என்கைக்கு,
இவள் அகலுவதற்குக் காரணம் உண்டோ?
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இது, அகன்றிருந்து’
என்று
தொடங்கி. ‘பாசுரமும்’ என்ற உம்மை, யோக்யதையையும் தழுவுகிறது.
3. இங்ஙனம் கூறுவது, இவள்
ஒருத்திக்குமேயோ? எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘நித்தியாநுபவம்’ என்று தொடங்கி.
‘நித்தியாநுபவம்
பண்ணுவார்க்கெல்லாம்’ என்றது, “நச அஹம்அபி ராகவ - இராகவனே!
உன்னைப்
பிரிந்தால் நானும் இல்லை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
4. உலகத்தாரும் இப்படிச்
சொல்லலாமே? அதற்கும் இதற்கும் வாசியாது?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நாட்டாருடைய’
என்று
தொடங்கி.
5. “அலர்மேல் மங்கை” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘அவனை’
என்று தொடங்கி. “நஜீவேயம்க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந்.
66 : 10.
ஸ்ரீராமபிரான் கூறியது.
6. “அலர்மேல்”
என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘பரிந்மளதான்’
என்று தொடங்கி.
|