முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
491

மார்பா - 1இதனால், நித்தியயோகம் சொல்லுகிறது. எனக்கு ஒருகாலம் பார்த்துச் சரணம் புகவேண்டும்படியாயோ இருக்கிறது? என்றது, இத் தலையில் குற்றங்களையும் ஈசுவரனுடைய சுவாதந்திரியத்தையும் நினைத்துப் பிற்காலிக்க வேண்டாதபடியாயிருக்கையைத் தெரிவித்தபடி.

    2
“ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச்செய்கைக்காக ‘எல்லாரும் செல்லுங்கோள்’ என்ன, நஞ்சீயரும் எழுந்து சென்றுபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச்செய்திலர்’ என்று வெறுத்திருக்க, அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து துவயத்தை அருளிச்செய்கையில் அருளிச்செய்தவார்த்தை” என்று சீயர் அருளிச்செய்வர். “இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க, “அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க, இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ; அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலைகொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே. அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.” போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ; இங்ஙனே இருக்கச்செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே. இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி; இவன் செய்த குறைகளைத் தான் காணாக்கண் இட்டிருக்கை அன்றிக்கே, தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ. ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில்

 

1. “உறைமார்பா” என்பதனை, நிகழ்காலவினைத்தொகையாகக் கொண்டு
  பொருள் அருளிச்செய்கிறார் ‘இதனால்’ என்று தொடங்கி.
  நித்தியயோகத்தால் பலித்தபொருளை அருளிச்செய்கிறார் ‘எனக்கு’
  என்று தொடங்கி. காலம் பார்த்தற்குக் காரணத்தைச் சொல்லுதல்
  முன்னாக மேலே கூறியதனை விவரணம் செய்கிறார் ‘இத்தலையில்’
  என்று தொடங்கி.

2. பிராட்டியினுடைய புருஷகாரம் அவசியம் வேண்டும் என்கைக்கு
  ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘ஒரு நாள் பட்டர்’ என்று தொடங்கி.