முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
50

தம

தம் மார்வகத்தே வைத்தார்க்கு’ என்றும் அன்றோ இவர் தமக்குப் பாசுரம். வேறு கொண்டே கூறுமின் - 1“இளையபெருமாள், கை கூப்பினவராய்ப் பிராட்டியின் முன்னிலையில் பெருமாளைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்” என்கிறபடியே, அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள். 2நல்வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.

(9)

562.

    வேறுகொண்டு உம்மை யான்இரந்தேன்; வெறிவண்டினங்காள்!
    தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
    மாறில் போர்அரக்கன் மதிள் நீறுஎழச் செற்றுகந்த
    ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.

   
பொ-ரை :- வாசனை மிக்க கூட்டமான வண்டுகளே! உங்களைத் தனியாக அழைத்து யான் இரக்கின்றேன்; தெளிந்த தண்ணீரையுடைய பம்பை நதியின் வடகரையிலேயுள்ள திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற, போரைச் செய்கின்ற எதிர்இல்லாத அரக்கனாகிய இராவணனுடைய மதில்கள் தூசி பரக்கும்படியாக அழித்து மனமகிழ்ந்த ஏறுசேவகனார்க்கு ‘யானும் இருக்கின்றேன்’ என்றாள் என்று சொல்லுங்கோள்.

    வி-கு :- வண்டினங்காள்! யான் உம்மை வேறு கொண்டு இரந்தேன், செற்று உகந்த திருவண்வண்டூர் ஏறுசேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்கள் என்க. வெறி - வாசனை. சேவகன் - வீரன்.

 

1. பிராட்டியினுடைய சேர்த்தியிலே சொன்னால் காரியம் அறுதியாகப்
  பலிக்கும் என்னுமதனைத் திருஷ்டாந்தமூலம் காட்டுகிறார் ‘இளைய
  பெருமாள்’ என்று தொடங்கி.

 
“ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷ்மண: ஸம்யதாஞ்ஜலி:
   ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் அதம் வசநம் அப்ரவீத்”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.

2. வார்த்தை பயனுடையதாகச் செய்யும் பிரகாரத்தைக் காட்டுகிறார்
  ‘நல்வார்த்தை’ என்று தொடங்கி. ‘நல்வார்த்தை’ என்றது, “நகஸ்சிந்
  நாபராத்யதி குற்றம் செய்யாதார் ஒருவருமிலர்” என்ற வார்த்தையினை