க
கிற்குத் தலைவியாய்
விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், 1“விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும்
சொல்லுகிறபடியே, தன் சொரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது. 2எங்ஙனே? என்னில்,
ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும், வாசனை,
மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும், ஈசுவரன், சுவாதந்திரியம் குலையாமலே
பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ, இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம்
கொடுக்கும்படி. 3பிரிவிற்குக் காரணம் கர்மம் அன்றோ? கர்ம சம்பந்தம் இன்றிக்கே
இருக்க, இவள் ‘அகலகில்லேன்’ என்னப் போமோ? என்னில், கர்மத்தைப் போன்று, அவனுடைய வைலக்ஷண்யம்
காரணமாகச் சொல்லுகிறாள். நன்று; வைலக்ஷண்யம் போக்கியமாமத்தனை அன்றோ? அது மேலும் மேலும்
அநுபவிக்கும் இச்சையை விளைக்குமே ஒழிய “இறையும் அகலகில்லேன்” என்னப் பண்ணுமோ? என்ன,
விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால் ‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத்
துணுக்கு என்னுமவனைப்போலே ‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று 4அஸ்தாநேபயசங்கை
பண்ணுகிறாள். 5புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறுக்கமாட்டேன் என்பாள்
‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது, அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் சஹியாத
சுணையுடைமை போன்று, புணர்ச்
1. “விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 8 :
17.
2. ‘எங்ஙனே? என்னில்,’
என்றது, தன் சொரூபம் குலையாதபடி எங்ஙனே?
என்னில் என்றபடி. அநந்யார்ஹசேஷம் - அவனுக்கே சேஷம்.
3. இனிமையின் மிகுதியினாலே
அதிசங்கை கொள்ளுகிறாள் என்று மேலே
இரண்டு யோஜனைகளிலும் விரிவாக அருளிச்செய்ததனைச்
சங்காபரிஹார
முகத்தால் சுருங்க அருளிச்செய்கிறார் ‘பிரிவிற்குக்
காரணம்’ என்று தொடங்கி.
4. அஸ்த்தாநேபய சங்கை
பண்ணுதல் - இடமல்லாத இடத்திலும்
அச்சத்தாலே ஐயப்படுதல்.
5.
“இறையும்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘புணர்ச்சிக்கு’ என்று
தொடங்கி.
புணர்ச்சிக்கு அங்கமான பிரிவு - இறுகத் தழுவுவதற்காக
நெகிழ்த்து அணைக்கை. அதனைத் திருஷ்டாந்தத்தோடு
விவரணம்
செய்கிறார் ‘அவன் உபாயமாமிடத்தில்’ என்று தொடங்கி. ‘அங்கத்தை’
என்றது, ஆநுகூல்ய
சங்கல்பம் முதலானவைகளை சுணையுடைமை.
அபிமாநம்.
|