முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
515

New Page 1

நேரமும் பிழைத்திருக்கமாட்டேன்” என்றான் அவன். 1பரதந்திராயிருப்பார்க்கு உடையவன்வருந்தனையும் பொறுக்கவேணு மன்றோ; ஸ்வதந்திரனுக்கு அது வேண்டாமே. 2இப்படி இரண்டு இடமும் விலக்ஷணமாயிருக்கிற இருவரையும் உத்தேசியமாகக் கொண்டிருக்கிற முமுக்ஷுக்களுக்கு ஒருகுறை உண்டோ? 3இவர்களைத் தனித் தனியே பற்றினார்க்கு ஸ்வரூபத்தின் அழிவே அன்றோ. ‘மிதுனமே உத்தேசியம்’ என்று இருப்பார்க்கு ஆத்ம உஜ்ஜீவனமன்றோ. இராவணாதிகள் பக்கல் இவ்வர்த்தம் காணவுமாம்.

    அலர்மேல்மங்கை - மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும், எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள். 4அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள், ‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ. 5அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின் ‘உறைமார்பா’ என்கிறது. என்றது, 6ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை நினையாதவாறு போலவும்,

 

1. நன்று; அவன் “ஒருகண நேரத்துக்குமேல் பிழைத்திருக்க மாட்டேன்”
  என்னாநிற்க, இவள் “ஒருமாதத்திற்குமேல் பிழைத்திருக்க மாட்டேன்”
  என்னுதல் பிராவண்யத்துக்குத் தாழ்ச்சி அன்றோ? எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘பரதந்திரராயிருப்பார்க்கு’ என்று தொடங்கி.

2. இதுகாறும் கூறியவற்றால் பலித்தபொருளை அருளிச்செய்கிறார் ‘இப்படி’
  என்று தொடங்கி.

3. இருவரும் உத்தேசியமாகப் பற்றாமல், தனித்தனியே பற்றினாலோ? எனின்,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்களை’ என்று தொடங்கி. ‘ஆதி’
  என்றதனால், ஸ்ரீ விபீஷணாழ்வானையும் சூர்ப்பணகையையும் கொள்க.

4. வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘அவனை அகலகில்லேன்’ என்று தொடங்கும்
  வாக்கியம். ‘பரிகரம்’ என்றது, வைலக்ஷண்யத்தையும் பருவத்தையும்.

5. “உறைமார்பா” என்ற நிகழ்கால வினைத்தொகைக்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘அவன் மார்வின்’ என்று தொடங்கி.

6. பலகாலம் பயின்றது ஒன்றனை நினையாதிருக்கப்போமோ? என்ன,
  திருஷ்டாந்தத்தோடு விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ ஜநகராஜன்’ என்று
  தொடங்கி.