New Page 1
முக்தன் “சனங்களின்
சமீபத்திலுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” என்கிறபடியே, சம்சாரத்தை நினையாதவாறு
போலவும், அவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு பூவினை நினைத்திலள் என்றபடி. 1சுருக்கமற்ற
ஞானத்தினையுடையராயிருக்கச் செய்தே சம்சாரத்தைக் காணாத இடம் ஞானக் குறை அன்றே, இனிமையின்
மிகுதி அன்றோ. இவளும் இனிமையாலே அன்றோ காணாது ஒழிகிறது. 2இவள் பூவினைக் காணாதவாறு
போன்று திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது.
மற்றுள்ள அவயவங்கள் குமர்கிடந்து போமத்தனை. இவ்வளவால் என் சொல்லியவாறோ? எனின், ஸ்ரீ என்ற
சொல்லின் பொருளும் மதுப்பின் பொருளும் சொல்லியபடி. 3ஸ்ரீ சப்தம், புருஷகாரம் வேண்டுகையாலே
சொல்லிற்று; 4மதுப்பில் எப்பொழுதும் சேர்ந்திருப்பதற்குப் பிரயோஜனம் என்?
என்னில், பற்றுகிற அடியார்கட்குக் காலம் பார்க்க்வேண்டாதபடி எப்பொழுதும் அண்மையில் இருத்தல்
பயன்.
நிகர்இல் புகழாய்
- நாராயண சப்தார்த்தம் சொல்லுகிறது. 5உபயவிபூதிகளோடு கூடி இருத்தலும், “தத்துவங்கள்
நரனிடமிருந்து உண்டாயின; ஆதலால், இவற்றை நாரங்கள் என்று அறிகிறார்கள்; அவையே அவனுக்கும்
இருப்பிடம்; ஆதலால், அவன் நாராயணன் என்று சொல்லப்படுகிறான்” என்கிறபடியே,
1. முக்தன் அங்குள்ள இனிமையின்
மிகுதியாலே சம்சாரத்தை நினைப்பது
இல்லை என்ன வேண்டுமோ? ஞானக் குறைவாலே நினைப்பது இல்லை
என்றாலோ? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சுருக்கமற்ற’
என்று தொடங்கி.
2. “மார்பா” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இவள் பூவினை’ என்று
தொடங்கி. குமர் கிடந்து போதல்-அநுபவ
யோக்கிய மின்றிக் கிடத்தல்.
குமர் - குமரி.
3. ஸ்ரீ சப்தம் - ஸ்ரீ என்ற
சொல்லின் பொருள்.
4. “மதுப்பில்’ என்றது, துவயத்தில்
‘ஸ்ரீமத்” என்றதிலேயுள்ள “மத்”
என்னும் இடைச்சொல்லினை.
5. மற்றைய குணங்களைக் காட்டிலும்
இதற்கு ஒப்பு இல்லாமையைச்
சொன்னதற்கு, பாவம் அருளிச் செய்கிறார் ‘உபய விபூதிகளோடு’ என்று
தொடங்கி.
“நராத் ஜாதாநி தத்வாநி
நாராணீதி ததோவிது:
தாந்யேவச அயநம் தஸ்ய
தேந நாராயண: ஸ்மிருத:”
என்பது, பாத்மபுராணம்.
|