முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
519

ஒப

ஒப்பு அல்லர்; 1உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் உண்டாகையாலே, ஈசுவரன் ஒப்பு அல்லன். “உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க” என்று விலக்கி, “போக மாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத்தாலும்” என்கிறபடியே. பகவானுடைய அனுபவத்தில் மாத்திரம் சம்பந்தம் சொல்லுகையாலே. இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் 2“கானமும் வானரமும்” என்கிறபடியே, எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே, அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே, ‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது, 3சௌலப்யமாவது, உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசி அறச் சர்வசுலபமான அர்ச்சக பராதீனத்வம்.

    4
புகல் ஒன்று இல்லா அடியேன் - “பிரபத்யே” என்கிற இடத்தில், தன்மை இடத்தால் வந்த அதிகாரி சொரூபத்தைச் சொல்லுகிறது. அநந்யகதித்வமும், சொரூபப் பிரகாசமான அநந்யார்ஹசேஷத்வமும் சொல்லுகிறது. 5‘புகல் ஒன்று இல்லா’ என்றும், ‘அடியேன்’ என்றும் இரண்டும் சொல்லவேணுமோ?

 

1. ஆயின், இவர்களுக்கு உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள்
  இல்லையோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘உலகத்தை’
  என்று தொடங்கி.

  “ஜகத்வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத்வாத்ச”

  என்பது, பிரம்ம சூத்திரம் உத்தரமீமாம்சை, 4. 4 : 17.

  “போகமாத்ர ஸாம்யலிங்காத்ச”

  என்பது, பிரம்மசூத்திரம் உத்தரமீமாம்சை, 4. 4 : 21.

2. நான்முகன் திருவந். 47.

3. “திருவேங்கடத்தானே” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
  ‘சௌலப்யமாவது’ என்று தொடங்கி.

4. “புகல் ஒன்றில்லா” என்றதனால், பிரபத்திக்கு அங்கமான
  ஆகிஞ்சந்யமும், “அடியேன்” என்றதனால் அநந்யகதித்வமும், சொரூபப்
  பிரகாசமான அநந்யார்ஹசேஷத்துவமும் சொல்லுகிறது. “அடியேன்” என்ற
  சொல்லுக்கு நேர்பொருள், அநந்யார்ஹசேஷத்துவம்.
  பொருளாற்றலால்போந்த பொருள், அநந்யகதித்வம். ஆகிஞ்சந்யமாவது,
  வேறு உபாயங்கள் இன்மை.

5. “புகல் ஒன்று இல்லா” என்று தொடங்கும் வினாவிற்குக் கருத்து, “புகல்
  ஒன்றில்லா” என்பதும், ஆகிஞ்சந்யம் சொரூபத்திலே பிரகாசிக்கும்படியான
  அநந்யார்ஹசேஷத்துவத்தைச் சொல்லுகையாலே, இவற்றுள், ஒன்றே
  போதியதாமே? இரண்டும் கூறல்வேண்டுமோ? என்பது.