வ
விசேஷமாகச் சமாசாரத்தைச்
சொன்னார்” என்றாற்போலே. உம்மை-இரந்தார்களுடைய காரியங்களைச் செய்தன்றி நிற்கமாட்டாத
உங்களை. யான் - 1அவனுடைய முதல் இரப்புப்போலே காணும் இவளதும். அன்றிக்கே,
யான் இரந்தேன் - 2அவன்தான் இரக்க இருக்குமவளன்றோ இரக்கிறாள் என்னுதல்.
3இவள்பக்கலிலே தாழ நிற்பான் அவனாயிற்று. நன்று; இவற்றை வேறுகொண்டு இரக்க வேண்டுவான்
என்? என்னில், 4அவற்றினும் இவை பலகால்களையுடையன ஆகையாலே. இன்னம் ஒன்று,
சபைக்கு அஞ்ச வேண்டாதே வளையத்தே இருந்து வார்த்தை சொல்லவும் வல்லனவேயன்றோ அன்றிக்கே.
“தேன்உண்ணும் வண்டேபோல் பங்கிகள்” என்றும் அவனுக்குத் தலையான திருஷ்டாந்தமாகவும்
சொல்லுவது இவற்றை அன்றோ. வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் -5நம் ஆசாரியர்கள்
வியாபக மந்திரங்கள் மூன்றிலும் துவயத்தையே ஆதரிக்குமாறுபோலே.
1. ‘அவனுடைய முதல் இரப்புப்போலே
காணும் இவளதும்’ என்றது,
சுக்கிரீவமஹாராஜரிடத்தில் அவன் இரந்தது போன்று, எல்லாராலும்
அடையப்படும் பெருமையையுடைய இவளும் பறவைகளை இரக்கிற
இதுவும் என்றபடி.
2. “யான் இரந்தேன்”
என்பதற்கு, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘அவன் தான்’ என்று தொடங்கி.
3. இவள் அவனை
இரத்தல் பொருத்தமாயிருக்க, அவன் இவளை இரக்குமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இவள் பக்கலிலே’ என்று
தொடங்கி.
4. வேறுகொண்டு
இரத்தலுக்கு மூன்று வகையாகக் காரணங்களை
அருளிச்செய்கிறார் ‘அவற்றினும்’ என்று தொடங்கி.
‘தேன் உண்ணும்’
என்று தொடங்குவது மூன்றாவது காரணம். இது, பெரியாழ்வார் திருமொழி,
1. 8 :
2. ‘தலையான திருஷ்டாந்தம்’ என்பதற்கு, சிறந்த திருஷ்டாந்தம்
என்றும், தலைமயிருக்குத் திருஷ்டாந்தம்
என்றும் இருவகைப் பொருள்.
5. மேலே கூறிய மூன்று
காரணங்களுள், முதலாவதாகக் கூறிய பொருளிற்குச்
சுவாபதேசம் அருளிச்செய்கிறார் ‘நம் ஆசாரியர்கள்’
என்று தொடங்கி.
‘வியாபக மந்திரங்கள் மூன்றிலும்’ என்றது, வாசுதேவன், விஷ்ணு,
நாராயணன் என்னும்
வியாபக மந்திரங்கள் மூன்றிலும் என்றபடி. “பகவந்
மந்திரங்கள்தாம் அநேகங்கள்”, “அவைதாம்,
வியாபகங்கள் என்றும்
அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம்”, “அவ்யாபகங்களில்
வியாபகங்கள்
மூன்றும் சிரேஷ்டங்கள்”, “இவை மூன்றிலும் வைத்துக்
கொண்டு பெரிய திருமந்திரம் பிரதாநம்.”
என்பது முமுக்ஷூப்படி.
‘மூன்றிலும் திருமந்திரத்தை ஆதரிக்குமாறுபோலே’ என்னாது, ‘துவயத்தை’
என்றது,
துவயம், திருமந்திரத்தின் விவரணம் ஆகையாலே என்க.
|