இர
இராவணன் சொன்ன காரியங்களைச்
செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீ அன்றோ குற்றவாளன்! 1‘எல்லாப்படியாலும்
பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு நானும் அவர் வழிபோக வேண்டி
இருந்த அன்றைக்கு நீ உண்டு’ என்றிருந்தேன்; நீயும் இங்ஙனேயானால் அபராதம் செய்தார்க்குப்
புகுவாசல் உண்டோ?’ என்கிறாள்.
(10)
662.
அடிக்கீழ் அமர்ந்து
புகுந்து அடியீர்வாழ்மின் என்றென்
றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப்
பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன
ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும்
பிடித்தார் பிடித்தார்
வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.
பொ-ரை :- அடியீர்! திருவடிகளிலே பொருந்தி புகுந்து
வாழுங்கோள் என்று திருவருள் செய்கின்ற, இப்படிக்கு ஒப்பு இல்லாத திருவேங்கடமுடையானை, வயல்கள்
சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் முடிப்பதாக அருளிச்செய்த, ஆயிரத்திலே திருவேங்கடத்தைப்
பற்றிய இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்றவர்களைப் பற்றியவர்கள் அந்தமில் பேரின்பத்
தழிவில் விட்டிலே சென்று பேரின்பத்தை அடைவார்கள்.
வி-கு :-
அடியீர் புகுந்து அமர்ந்து வாழ்மின் என்று
அருள் கொடுக்கும் பெருமான் என்க. முடிப்பான்: வினையெச்சம்.
ஈடு :-
முடிவில், 2இத் திருவாய்மொழி கற்றார், பரமபதத்திலே சென்று அடிமையிலே முடிசூடினவராய்
அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
1. “நகஸ்சித் ந அபராத்யதி”
என்றதனுடைய தாத்பரியசித்தமான
பொருளை அருளிச்செய்கிறார் ‘எல்லாப்படியாலும்’ என்று தொடங்கி.
‘நீ
உண்டு என்று இருந்தேன்’ என்றது, ஸ்ரீ விபீஷணாழ்வான் சரணம்
புகுந்தபோது மஹாராஜரை உள்ளிட்ட
முதலிகள் அனைவரும் ‘இவன்
கொல்லத் தக்கவன்’ என்னாநிற்க, “தூயவர் துணிதிறன் நன்று தூயதே”
என்று தொடங்கி, “ஆதலால் இவன் வரவு நல்வரவே என உணர்ந்தேன்”
(கம். விபீ. பட. 89-165) என்பது இறுதியாகக் கூறிப் புருஷகாரம்
செய்ததனைத் திருவுள்ளம்பற்றி என்க.
2.
“வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே” என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
“வீற்றிருந்து” என்ற பதத்தைத்
திருவுள்ளம்பற்றி ‘அடிமையிலே முடி சூடினவராய் என்கிறார்.
|