New Page 1
தேறு நீர்ப் பம்பை
- 1இவ்வூரின் எல்லையைக் கழிந்தவாறே தெளிந்த பொருள்களையும் காண்கின்றீர்கோள்
அன்றோ. 2இவள் இருந்த இடத்தில் அடையக் கலங்கியன்றோ கிடக்கிறது. “உபதப்தோதகாநத்ய:
- மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’
என்னும் இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று
தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. 3நிலைநீர்கள்தாம்
குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன. “பல்வலாநி ஸராம்ஸிச - சிறு
குழிகளோடு பெருங்குளங்களும்”. 4மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு
போலே இப்படியேயன்றோ இவள் இருக்கிற இடம். வடபாலைத் திருவண்
1. ‘தெளிந்த நீரையுடைய பம்பை’ என்கிறவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘இவ்வூரின்’ என்று தொடங்கி.
2. ‘இவ்வூரின் எல்லையைக்
கழிந்தவாறே’ என்கைக்கு, தான் இருந்த ஊர்
அப்படி இருக்க இல்லையோ? என்ன, அதற்கு விடை
அருளிச் செய்கிறார்
‘இவள் இருந்த’ என்று தொடங்கி. இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘உபதப்த’ என்று தொடங்கி.
“உபதப்தோதகா:
நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸு ஷ்க பலாஸாநி
வநாநி உபவநாநி ச”
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
59 : 5.
3. ‘நிலைநீர்கள்தாம்
குளிரவற்றோ என்று பார்த்தார்கள்’ என்றது, ஆற்றுநீர்
ஓடுகிற நீராகையாலே சுடக்கூடும், நிலைநீர்கள்
மேலே சுட்டாலும் உள்
குளிர்ந்திருக்கும் ஆகையாலே தாபம் ஆறும் என்று பார்த்தார்கள்
என்றபடி.
‘அவையும் அப்படியே இருந்தன’ என்றது, சூரிய வெப்பத்தால்
அன்றிக்கே, இராம விரஹத்தாலே வந்த
தாபம் ஆகையாலே எங்கும்
ஒருசேர கொதித்துக் கொண்டிருந்தன என்றபடி.
“பல்வலாநி ஸராம்ஸிச
உபதப்தோதகாநி” என்று கூட்டுக.
4. “ஸராம்ஸி - பெரியகுளங்கள்”
என்னாது, “பல்வலாநி - சிறுகுழிகள்”
என்று சிறுகுளங்களையும் கூறியதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘மரங்களோடு’ என்று தொடங்கி. என்றது, உயர்ந்தவர்களான வசிஷ்டர்
முதலானவர்களோடு தாழ்ந்தவைகளான
மரங்களோடு வாசி அற, இராம
விரஹத்தால் வந்த தாபம் சமமாயிருக்குமாறுபோலே, சிறு குழிகளோடு
பெரிய
குளங்களோடு வாசியற, இராமனுடைய பிரிவினாலே அழிந்தன
என்றபடி.
|