முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
55

வண

வண்டூர் - 1ஊரும் ஆறும் இன்ன இடத்திலே என்னுமிடம் நெஞ்சிலே பட்டுக்கிடக்கிறது காணும் இவளுக்கு. வடபால் - வடதிசை. கடலுக்குத் தென்பால் இருக்கிற பிராட்டியைப்போலேயாயிற்று இவள் இருக்கிற இருப்பு. 

     மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த - 2அறிவிப்பார் தாழ்வே; பின்பு விரோதி என்று கிடப்பது ஒன்று இல்லை. வீரப்பாட்டுக்குத் தலையான சக்கரவர்த்தித் திருமகனார் ‘நமக்கு இவன் எதிரியாகப் போரும்’ என்று மதிக்கும்படியாகப் பிறந்த பையல் வரத்தின்வலிமை தோள்வலிமை இவைகளாலே எதிர் இல்லாத போரையுடைய இராவணனையும், அவனுக்கு அரணாக இட்டமதிளையும் துகளாம்படி அழியச்செய்து மகிழ்ச்சிகொண்டவராய் இருக்கிற. ஏறு சேவகனார்க்கு - 3வரவு சிறிது தாழ்த்தது என்னா, எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்குக் குறைசொல்ல ஒண்ணாதே அன்றோ. 4“தேரிலிருந்து அதனை ஓட்டுவதிலும் பகைவர்கள் புகழும்படியான வீரத்தையுடையவர்” என்று வீரர்கள் கொண்டாடின வீரம் அன்றோ. என்னையும் உளள் என்மின்கள் - இன்னமும் நோவுபடுகிறார் உண்டு என்று சொல்லுங்கோள். இதற்கு, “‘இத்தலையைப் பிரிந்தாரில் இருப்பார் இல்லை’ என்று இருக்கையாலே வாராது ஒழிந்தார் அத்தனை; இத்தலையில் சத்தை உள்ளமையை

 

1. ஆழ்வாருடைய முற்றறிவு விஷயமாக வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘ஊரும்
  ஆறும்’ என்று தொடங்குவது.

2. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே பாவம் அருளிச்செய்கிறார் ‘அறிவிப்பார்’
  என்று தொடங்கி. “மாறில் போர் அரக்கன்” என்று விசேடித்ததற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘வீரப்பாட்டுக்கு’ என்று தொடங்கி. “மாறில்போர்
  அரக்கன். . . . .உகந்த” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘வரத்தின்
  வலிமை’ என்று தொடங்கி. “உகந்த” என்றது, ‘இருடிகள் குடி இருக்கப்
  பெற்றோம், பிராட்டியோடு கூடப் பெற்றோம், இலங்கை விபீஷணனுக்கு
  உரிமையாக்கப் பெற்றது’ என்றதனால் உகந்த என்றபடி. ஏறு சேவகனார்க்கு
  - பகைவர்கள் கூட்டத்திலும் ஏறும்படியான ஆண்பிள்ளைத்
  தனத்தையுடையவர்க்கு.

3. “கடியன் கொடியன்” என்ற அவனை வெறுக்கிற இவள், இங்கு
  “ஏறுசேவகனார்க்கு” என்பது என்? என்ன, அதற்கு விடை அருளிச்
  செய்கிறார் ‘வரவு சிறிது’ என்று தொடங்கி.

4. அப்படி மேல் எழுத்திட்டார்களோ? என்ன, ‘தேரிலிருந்து’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

  “கஜஸ்கந்தே அஸ்வப்ருஷ்டேச ரதசர்யாஸு ஸம்மத:
   தநுர்வேதேச நிரத: பித்ருஸு ச்ரூஷணேரத:”

  என்பது, ஸ்ரீராம. பால. 18 : 26.