முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
56

அற

அறிவியுங்கோள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். இதனை, எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது ஆகிலும், இன்றியமையாமை என்று தமிழரது ஒரு 1பிரவாதம் உண்டு; அதாகிறது, ஒருதலை உண்டானால் ஒருதலை இன்றிக்கே இராது; இரண்டு தலையும் உண்டாதல், இரண்டு தலையும் இன்றிக்கே ஒழிதல் இத்தனையாயிற்று. அதில், தாம் உளராகையால் இத்தலையும் உண்டு என்கை நிச்சிதம்; ஆனபின்பு, பிரதி கூலித்தாரைக் கிழங்குஎடுத்துப்பொகட்டு அநுகூலித்தார் தலையிலே முடியை வைத்துக் கிருதக்கிருத்யராய், ‘இனிச் செய்ய வேண்டிய குறை ஒன்றும்இல்லை” என்றிருக்கிறவர்க்கு, இன்னமும் ரக்ஷ்யவர்க்கம் ஒன்று உண்டு என்று சொல்லுங்கோள் என்கிறாள் என்று அருளிச்செய்தார்.

(10) 

563.

    மின்கொள் சேர்புரி நூல் குறளாய் அகல்ஞாலம்கொண்ட
    வன்கள்வ னடிமேல் குருகூர்ச்சடகோபன் சொன்ன
    பண்கொள் ஆயிரத்துள்இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
    இன்கொள் பாடல்வல்லார் மதனர்; மின்னிடையவர்க்கே.

 

1. இங்கு,

  “இன்னுயிர் அன்னாற்கு எனைத்தொன்றும் தீதின்மை
   என்னுயிர் காட்டாதோ மற்று”

(கலித். நெய்தற்கலி, 26.)

  என்ற பகுதியையும், “என் இனிய உயிரை ஒப்பானுக்கு யாதொன்றும்
  தீதின்றி அவனுளனாயிருக்கின்றமையை, அவன் உயிரோடு ஒன்றாகிய
  என்னுயிர் ஈண்டுக் காட்டாதொழியுமோ? அது, தான் இறந்துபடாது அவன்
  இருந்தமை காட்டிற்றில்லையோ?” என்ற அதனுரையையும்,

  காதலாள் உடலுள்உயிர் கைவிடின்
  ஏத மென்னுயிர் எய்தி இறக்கு மற்று
  ஆதலால் அழிவொன்றிலள்; அல்லதூஉம்
  மாதர் விஞ்சையும் வல்லளும் அல்லளோ.

  என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்கல் தகும்.

(கனகமாலை. செய். 1631.)

  நையா நின்றனென் நானிருந் திங்ஙன்
  மெய்வானோர் திருநாடு மேவினாய்
  ஐயா! நீ என தாவி யென்றதும்
  பொய்யோ! பொய்யுரையாத புண்ணியா!

  என்ற கம்பராமாயணச் செய்யுளும் இக் கருத்தேபற்றி வந்தது.

(கிட்கிந். அரசியற். 9.)

  பிரவாதம் - பொதுவான வார்த்தை.