முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
64

புறப

புறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும். புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர - 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: - தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே - 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்

 

  “ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
   நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

      “பொறாமை கோபம் இவற்றைத் தள்ளிப்பொகடும்” என்கிறவளுடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘பிறர் உயர்த்தி’ என்று தொடங்கி.
  ‘உனக்கு உயர்வு யாது? அது கண்டு நாம் என்செய்கிறோம்?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நான் உம்மோடு’ என்று தொடங்கி.

1. ‘இவையும்’ என்றது, பொறாமை கோபம் இவற்றை. ‘அப்படியாகாதே’
  என்றது, குடித்து எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று தள்ளத் தக்கவை
  ஆகாவோ என்றபடி.

2. உன் உயர்த்தி கண்டால் பொறுக்க வேண்டுவான் என்? என்ன, ‘உம்முடைய
  காதல் சித்திக்காக’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பிரணயிகள்’
  என்று தொடங்கி. ‘இங்ஙனே காணும்’ என்றது, மேல் வாக்கியத்தில் கூறிய
  பொருளைச் சுட்டுகிறது.

3. “வீர மாம் நய - வீர என்னை அழைத்துக்கொண்டு போம்”
  என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘என்னை அறியாதது’
  என்று தொடங்கி. ‘என்னை அறியாதது போன்று உம்மையும்
  அறிந்திலீராகில்’ என்றது, “அகலகில்லேன் இறையும்” என்கிற என்
  சொரூபத்தை அறியாததுபோன்று, “பகைவர்களாலும் துதித்துப்
  பேசப்படுகின்ற வீரத்தையுடையவர்” என்கிற உம்முடைய தன்மையையும்
  அறிந்திலீராகில் என்றபடி.

4. பிரிவில் தரித்திருக்கைக்குக் காரணம், பாபம் என்று திருவுள்ளம் பற்றி
  அருளிச்செய்கிறார் ‘பொகடும்’ என்று தொடங்கி. பொகடும்-விடும் என்றபடி.