முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
69

வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி. தாம்-1தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை. வ்யதிதாம் - முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள். 2‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’ அநிந்திதாம்-3அத்தலையைப் பிரிந்தால் இருக்கக்கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே, வ்யபேத ஹர்ஷாம்-‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை. பரிதீந மாநஸாம்-உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை. ஸுபாம் - 4மண் தின்று வந்த நகடுபோல் அன்றே குணாதிகவிஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி; கடலேறி வடிந்தாற்போலே இருக்கிற அவ்விருப்புதனக்கே ஆலத்தி வழிக்கவேண்டும்படி இருக்கை. ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம்தாம் சொரூபம் பெற்றன. என்றது, சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி. என்போலே என்னில், நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:- அர்த்திகளாயிருப்பார் உதாரர்பக்கலிலே சென்று தங்கள் தங்கள் பிரயோஜனம்பெற்று உவகையினராமாறுபோலே. இப்படியாயிருந்தன நிமித்தங்களின் அளவு.

 

1. “தாம்” என்பது, சொரூபத்தை மாத்திரம் சொல்லுகிற சொல். இதனையே
  அருளிச்செய்கிறார் ‘தர்மிக்கு’ என்று தொடங்கி.

2. ஸ்ரீராமா. சுந். 33 : 17.

3. ‘அத்தலையைப் பிரிந்தால் இருக்கக்கடவபடியே இருந்தாள்’ என்றது,
  உத்தமநாயகனைப் பிரிந்தால் இருக்கக் கூடிய படியே இருந்தாள் என்றபடி.

  அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்துமென் றழுங்கும்
  விருந்து கண்டபோ தென்னுறு மோஎன்று விம்மும்
  மருந்து முண்டுகொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்
  இருந்த மாநிலம் செல்லரித் திடவுமாண் டெழாதாள்.

  என்ற பாசுரம் நினைவுகூர்தல் தகும். கம். சுந்.

4. “சுபாம்” என்கைக்கு, இந்த நிலையில் அழகு உண்டோ? என்ன,
  ‘மண்தின்று’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  இதனை விவரணம் செய்கிறார் ‘கடலேறி வடிந்தாற்போலே’ என்று
  தொடங்கி. ‘ஆலத்தி வழிக்க வேண்டும்படி’ என்னுமிவ்விடத்தில்
  “செழுநீர்த் தடத்துக்கயல் மிளிர்ந்தால் ஒப்பச் சேயரிக்கண், அழுநீர்
  துளும்ப அலமருகின்றன வாழியரோ” என்ற திருப்பாசுரப் பகுதி
  அநுசந்தேயம். நகடு-பசலை நிறமும், சோபையும், வியாதியும்.