முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
7

கால்நடை தந்து போகமாட்டாள், தன் பந்துவர்க்கம் 1தனக்குமுன்னே நோவுபட்டாரன்றோ. இனி, கால்நடை தந்து போகவல்லார் வேண்டுமே; 2தன்பக்கத்தில் வாழ்கிற பறவைகளை, ‘ஒரே இடத்தில் வசிப்பதால் வந்த சம்பந்தமே நம் காரியம் செய்து தலைக்கட்டுகைக்கு உறுப்பு’ என்று பார்த்து, அவற்றின் கால்களிலே விழுந்து போக விடுகிறாள்.

    3
சீயர், இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கவாறே, உருத்தோறும் அருளிச்செய்யும் வார்த்தை: ‘பாண்டவர்கள் காரியத்துக்காகத் தன்னை ஓக்கி அவர்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு கூடத் திரியச்செய்தேயும் அவர்கள் பட்ட வியசனமெல்லாம் படுகிறார் காணும் இவரும். 4அவர்கள்தாம் ஒரு தர்மஆபாசம் உண்டு என்று இருக்கையாலே வியசனப்பட்டார்கள்; இவர்க்கு அதுவுமின்றிக்கே இருக்க என்செய்யப்படுகிறார்’ என்று அருளிச்செய்வர். 5ஏ பிரபுவான கிருஷ்ணனே! நீர் ஜீவித்திருக்கும்போதும், அத்தகைய நான் ஒருவனால் மயிர் பிடித்து இழுக்கப்பட்டவளாய், பெருந்துன்பத்தை அடைந்து பாண்டு புத்திரர்கள் இருக்கும் சபையை அடைந்தேனே!”

 

1. “யாமுடைத் துணையென்னும் தோழி மாரும்
   எம்மின்முன் அவனுக்கு மாய்வ ராலோ”

  என்பது, ஈண்டு அநுசந்தேயம். (9. 9 : 5.)

2. உறவு இல்லாத பறவைகள் தன் காரியம் செய்யக்கூடுமோ? என்ன, ‘தன்
  பக்கத்தில்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
  என்றது, ஒரே இடத்தில் வசிக்கும் தன்மையால் வந்த சம்பந்தம் காரியம்
  செய்கைக்கு உறுப்பு என்றபடி.

3. சர்வேசுவரன் இவரிடத்தில் மிகுந்த பிரீதியுள்ளவனாயிருக்கச் செய்தேயும்,
  இவர் இடைவிடாது நோவுபடுகிறபடியை அநுசந்தித்து நஞ்சீயர்
  ஈடுபட்டருளுகிற விதத்தை அருளிச்செய்கிறார் ‘சீயர்’ என்று தொடங்கி.
  ‘தன்னை’ என்றது, கண்ணபிரானை.

4. பாண்டவர்களோடு ஒப்பார் ஒருவரோ இவரும்? என்ன, ‘அவர்கள் தாம்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். தர்மாபாசம் -
  போலிதர்மம்; தர்மப்போலி.

5. போலி தர்மங்களைவிட்டு, அவன் கையைப் பார்த்திருக்கச் செய்தேயும்,
  இவன் படுகிற நிலை யாருடைய நிலையைப்போலே இருக்கிறது? என்ன,
  ‘ஏ பிரபுவே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

  “ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா பரிக்லிஷ்டா ஸபாம்கதா
   பச்யதாம் பாண்டுபுத்ராணாம் த்வயிஜீவத்யபி ப்ரபோ!”

  என்பது, பாரதம் உத்யோகபர்வம்.