1இன
1இனி,
அவன் அளவு பார்த்தால், “ஆர்த்தோவா யதிவாதிருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்; அன்றிக்கே,
நாம் திருநாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறுபோலே செருக்காலே
சொல்லவுமாம். 2இங்ஙனம் விகல்பிப்பான் என்? 3ஆர்த்தனுக்கு அன்றோ
பலத்தை அடைதல் உள்ளது? மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிறஇடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
4இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
1. நிமித்தங்கள் மாத்திரமே
யல்லாமல், ‘அவன்தான் பேரருட்கடல்
ஆகையாலும், அவனுடைய வரவு தப்பாது என்றுகொண்டு இருந்தாள்’
என்று, இரண்டாவது பரிஹாரம் அருளிச்செய்கிறார் ‘இனி, அவன் அளவு’
என்று தொடங்கி,
‘என்றிருப்பான் என்றிருக்கையாலும்’ என்றது முடிய.
“ஆர்த்தோவா
யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந்
பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா”
என்பது, ஸ்ரீராமா. யுத். 18
: 28.
‘ஆர்த்தனாய்ச்
சரணம் புகவுமாம்’ என்றது முதல், ‘இத்தனையும்
செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா”
என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார். சுலோகத்திலுள்ள
“த்ருப்த:”
என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’
என்று தொடங்கி. திருப்தனாவான்,
சம்சாரதோஷ ஞானமும்
பகவத்வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக்கொண்டு
ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு,
இனிவரும் பிறவியினைப் பொறுக்காதவனாய், இப்பிறவி
முடியுமளவும்
ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச்
சொல்லுமாறுபோலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹிநிந்தா
நியாயத்தாலே எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச்செய்வர்.
2. ‘இங்ஙனம் விகல்பிப்பான்
ஏன்?’ என்றதற்குக் கருத்து, ஆர்த்தன் திருப்தன்
என்னும் இவ்விருவருடைய பிரபத்திகள் ஒன்றற்கொன்று
நெடுவாசி
பட்டிருக்க, “ரக்ஷிதவ்ய: - ரக்ஷிக்கத் தக்கவர்கள்” என்று, இருவர்க்கும்
பலன் ஒன்றாக
விகல்பித்தல் கூடுமோ? என்னில் என்பது.
3. விகல்பித்தால்
வரும் குறை யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஆர்த்தனுக்கன்றோ’ என்று தொடங்கி.
மற்றையோனுக்கு - திருப்தனுக்கு.
4. ‘இந்தச் சுலோகம்’
என்றது, “ஆர்த்தோவா” என்ற சுலோகத்தினை என்றபடி.
|