முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
74

New Page 1

கொண்டு காரியம் செய்ய ஒண்ணாதபடியாகவும் அறுதியிட்டிருந்து, 1“கிருஷ்ணன் சுகமாக இருக்கிறாரா? என்று கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுவார், அவ்வார்த்தைகளால் பயன் என்” என்று இப் பிதற்றுத் தான் என்? என்பாராய், அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில் 2திருநாமம் சொல்லுகை பொறுக்கமுடியாதவாறு இருப்பது போன்று, இவர்கள்கோஷ்டியிலும் உகவை தலைமண்டையிட்டு, திருநாமம் சொல்லில் நெஞ்சு சிவிட்கு என்னும்படியாய்க் கொண்டு இருந்தார்கள் இவர்கள். இது இத்தலை இருந்தபடி.

    3
இனி, அத்தலை இருந்தபடி என்? என்றால், “வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்” என்கிற துயர ஒலி செவிப்பட்டது. 4“நல்லது செவிப்படுமவன்” அன்றோ.

 

1. “கச்சித் ஸு குஸலீ க்ருஷ்ண: சல ப்ரேம லவாத்மக:”
 
  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 24 : 12.

2. அரசன் அன்னவை உரைசெய மறையவன் அஞ்சிச்
  சிரதலம் கரம் சேர்த்திடச் செவித்தொளை சேர்ந்த
  உரக மன்னசொல் யானுனக் குரைசெயி னுரவோய்!
  நரக மெய்துவன் நாவும்வெந் துகுமென நவின்றான்.

  என்பது, முதலாக வருகின்ற செய்யுட்களால் காணத் தகும். கம்ப இரணியன்
  வதை. 37. சிவிட்கு - பொறாமை.

3. இவர்கள் இப்படி இருந்தார்களாகில் அவன் செய்தது ஏன்? என்னும்
  வினாவை அநுவதிக்கிறார் ‘இனி அத்தலை’ என்று தொடங்கி. மேலே,
  விட்ட தூதுவர் சென்று அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய்
  வருகிறான் என்றார். இங்கே, தூதரைக் குறித்துச் சொன்ன துயர ஒலி
  செவிப்பட்டு வருகிறான் என்கிறார். இவை இரண்டற்கும் சேர்த்தி ஏன்?
  என்னில், தூதர் சென்று அறிவிக்க வருகிறான் என்றும், இவள்
  ஆர்த்தநாதம் கேட்டு வருகிறான் என்றும் இரண்டனையும் சங்கதியாக
  யோஜித்துக்கொள்வது.

4. இங்கே இருந்து கூப்பிட்டால் கேட்குமோ? என்ன, ‘நல்லது செவிப்படுமவன்’
  என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

  “ருத்ரோ பஹு ஸிரா பப்ரு: விஸ்வயோநி: ஸு சி ஸ்ரவா:”

  என்பது, ஸஹஸ்ரநாமம்.