முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
76

வர

வர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துப் பொகட்டுத் தன்னுடைச்சோதி ஏற எழுந்தருளும்போதும் 1“மிக்க வருத்தத்தை யடைந்த மனத்தினனாய்” என்கிறபடியே, திருவுள்ளம் புண்பட்டாற் போலேயும்;

    2
“ஆடவர்களில் ஏறுபோன்றவரான வீடுமர் அம்புகளாகிய படுக்கையில் படுத்தவராய்க்கொண்டு அணையும் நெருப்புப் போன்றவராய் என்னைத் தியானித்தார், பின்னர் என் மனம் அவரிடம் சென்றது” என்கிறபடியே, அம்புப்படுக்கையில் படுத்திருப்பவரான ஸ்ரீவீடுமர்க்கு முற்பட்டவராய் உதவவேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று நோவுபட்டாற்போலேயும் பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் அன்றோ. 3“தர்ம ஸ்வரூபியான பெருமாள் எல்லா மக்களுக்கும் கருணையைச் செய்கிறார்; அதனால், அம்மக்கள் பெருமாளைப் பின் தொடர்ந்தார்கள்” என்று, 4என்முற்பாடு கண்டு பின்தொடர வேண்டியவர்கள் முற்பாடராம்படி நாம் பிற்படுவதே! என்று இருக்கும் அவன் அன்றோ. 5“நானே வந்து அடையத்தக்க இப்படிப்பட்ட பிராமணர்களாகிற உங்களால் கிட்டப் பெற்றேன், இது எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது, நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்கவேண்டும்” என்கிறபடியே, தண்டகாரண்யத்தில் வசிக்கின்ற இருடிகளுடைய துன்பத்திற்கு முற்பாடராய் உதவப் பெற்றிலோம் என்னும் இழவாலே நாணங்

 

1. “நாதிஸ்வஸ்த மநா:”

2. “ஸரதல்பகதோ பீஷ்ம: ஸாம்யந் இவ ஹுதாஸந:
   மாம் த்யாதி புருஷ வியாக்ர: தத: மே தத்கதம் மந:”

  என்பது, பாரதம் சாந்திபர்.

3. பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் என்பதற்குப் பிரமாணங்கள் இரண்டு
  காட்டுகிறார் ‘தர்மஸ்வரூபியான’ என்று தொடங்கியும், ‘நானே வந்து
  அடையத் தக்க’ என்று தொடங்கியும்.

  “ஸர்வேஷாம் ஹி ஸதர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம்
   சதுர்ணாம் ஸமயஸ்தாநாம் தேநதே தமநுவ்ரதா:”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15.

4. திருவயோத்தியிலுள்ளவர்கட்கு முதலில் கிருபைசெய்த பின்பேயன்றோ,
  அவர்கள் இவரிடத்திலே அன்பு செலுத்தியது; அதனை உட்கொண்டு,
  இவன் பிற்பாட்டுக்கு நோவுபடும் பிரகாரத்தை அருளிச்செய்கிறார் ‘என்
  முற்பாடு’ என்று தொடங்கி.

5. “ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா
   யத் ஈ ருஸை: அஹம் விப்ரை: உபஸ்தேயை: உபஸ்தித:”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 9.