முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
78

New Page 1

பெறுகைக்குத் தாழ்ச்சியேயன்றோ பரிகரம்; 1அது இத் தலையின் கடாக்ஷம் பெறாதிருக்கச் செய்வதற்குத் தொடங்கும்போது பயன் அற்றதாய் விடு மன்றோ. 2இனி இத்தனையும் செய்தால், ஆசையற்றுப் போகைக்குத் திருவடிகள் பெயராவே. 3இசைவின்றிக்கே இருக்க மேல் விழமாட்டானே. இனி, விழுக்காடு பாராதே மேல் விழுமன்று, மிருதுத் தன்மையளாகையாலே இழக்க வரிலும் வருமே. 4இனி, சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக்காடு ஏறப்போகமாட்டானே. என்றது, ‘இவன் சிறிது தாழ்த்தான்’ என்று வெறுத்து, ‘புகுருவான் அல்லன் நம் கோஷ்டியில்’ என்று இருக்கிற இவர்களைவிட்டு நாட்டாரோடு உறவு செய்யப்போவான் அல்லனே என்றபடி.

    இனி, ‘ஒருபடி பொருந்தினோமாம் விரகு என்?’ என்று, கடல் கடந்த திருவடி பட்டன எல்லாம் பட்டுத் 5“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னும் அளவு அன்றே. இனிச் செய்ய

 

1. ஆயின், தாழ்ச்சி செய்து விடலாமே? எனின், ‘அது இத்தலையின், என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். அது - தாழ்ச்சி.

2. ஆயின், சாதிக்க முடியாதது என்று நினைத்து நீங்கிச் செல்லலாமே?
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இனி இத்தனையும்’ என்று
  தொடங்கி. ‘இத்தனையும் செய்தால்’ என்றது, இப்படியானால் என்றபடி.

3. பலாத்காரத்தாலே மேல் விழ ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இசைவின்றிக்கே’ என்று தொடங்கி. ‘மிருதுத்
  தன்மையன்’ என்றது, மானமுடையவள் என்றபடி.

4. இவர்கள் இசையாவிட்டால் விருப்பத்திற்கிசைந்த வேறு பெண்கள்
  இலரோ? அங்கே போக ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்
  செய்கிறார் ‘இனி, சேர்ந்து’ என்று தொடங்கி. அழிஞ்சுக்காடு - பாலை
  நிலம்.

5. திருவடியைப்போலே திருநாம சங்கீர்த்தனம் செய்தாலோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘தசரதன்’ என்று தொடங்கி.

  “ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமாந்
   புண்ய ஸீலோ மஹாகீர்த்தி: ருஜு: ஆஸீத் மஹாயஸா:”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 2.

      ‘“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னுமளவன்றே’
  என்றது, பிராட்டியைப்போலே திருநாமம் கேட்டு மீளும் அளவு அன்று
  என்றபடி.