முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
81

என

என்றும் சொல்லுகிறபடியே ஒருகணமும் பிரிவினைப் பொறுக்கமாட்டாதவன், அவர்கள் அண்மையில் பெறாமலே நின்று முகம் பிழைக்க மாட்டானே.

    1
இனி, இவன் அங்கு வந்து சேர்ந்த காரணத்தாலே அவ்விடம் அடங்கலும் 2“தண்டகாரண்யமுழுதும் நீல நிறமாக ஆக்கிக் கொண்டு” என்கிறபடியே மயிற்கழுத்துச் சாயலாக, இவனுடைய நிரந்தரமான கடாக்ஷத்தாலே புளகாங்கிதம் கொண்ட சரீரத்தையுடையவர்களாக, இவனுடைய கடாக்ஷத்தாலுண்டான குளிர்ச்சி இவர்களுடைய பிரணயரோஷத்தால் வந்த கோபாக்நியும் விரஹாக்நியும் அன்றாகில் பொறுப்பதற்கும் அரிதாம்படியாய்க் 3கோபந்தான் அவன் சந்நிதியில் மிகைத்துவாராநிற்க, 4இவ்வகைப்பட்ட தன்மைகளைக் கொண்டு இவன் வந்தமையை நிச்சயித்துத் தங்களிலே ஒருமித்து முகம் மாறி யிருந்தார்கள். 5இவனும் அந்த இருப்பைக் கண்டு, எதிரிகள் இட்ட மதிள் ஆகிலன்றோ முறித்துப் புகலாவது. கிட்டப் பெறாமையாலும் அண்மையிலிருப்பதாலும் ஆற்றாமை கரைபுரண்டு கால் தரையில் பாவாதபடியாய்க்கொண்டு தடுமாறி வருகிற சமயத்திலே, இவனுடைய ஜீவன அதிருஷ்டத்தாலே இவர்கள் மறந்து போன பந்தும் கழலும் இவன் காலிலே தாக்கின. தாக்கவே, இருட்டு அறைகளிலே தடவிக்கொண்டு வாராநின்றால் உறியும் வெண்ணெ

 

1. இவன் இப்படித் தடுமாறுகிற இடத்தில் அவர்கள் செய்தது என்? என்ன,
  ‘இனி, அவன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
  என்றது, இவன் வந்ததனை மூன்று வழிகளாலே அறிந்து உறுதியான
  எண்ணமுடையவர்களாய் முகம் மாறி இருந்தார்கள் என்றபடி.

2. “ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 14.

3. அகன்று இருந்தால் அன்றோ கோபம் மிகுதல் வேண்டும்;
  அண்மையிலிருக்கும்போது கோபம் தணிய வேண்டியதுதானே? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கோபந்தான்’ என்று தொடங்கி.

4. ‘இவ்வகைப்பட்ட தன்மைகளைக்கொண்டு’ என்றது, தாங்கள் இருந்த இடம்
  மயிற்கழுத்துச் சாயலாகையும், தாங்கள் புளகாங்கிதம் கொண்ட சரீரத்தை
  யுடையவர்களாகையும், மிகைத்து வருகிற கோபத்தை
  யுடையவர்களாகையுமான தன்மைகளைக் கொண்டு என்றபடி.

5. இவ்வளவில் அவன் செய்தது என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இவனும் அந்த இருப்பைக் கண்டு’ என்று தொடங்கி.
  ‘கிட்டப் பெறாமையாலும்’ என்றது, கலக்கப் பெறாமையாலும் என்றபடி.