கலந
கலந்தான்; அவர்களையும்
பிரிந்தான்; அவ் வாற்றாமையோடே இங்கு வந்தான்; இவற்றை அவர்களுடைய விளையாட்டுப்
பொருள்களாக மயங்கினானித்தனை; இது நம்பக்கல் ஆசையுடையனாய்ச் செய்கிறானல்லன்’ என்று கொண்டு
இவர்கள் இருக்க, அவனும் 1தன்னழகாலும் குணங்களாலும் தன்செல்லாமையாலும் தாழ்ச்சிகளாலும்
இத்தலையில் ஊடலைத் தீர்த்துக் கலந்தபடி சொல்லுகிறது இத்திருவாய்மொழி.
2இனி,
இத்திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள், ‘பகவத் விஷயத்தில் பிரணயரோஷம் தோற்ற
வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று; “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம்
தாழ்ச்சியை அருளிச்செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள். இதனைப் பட்டர் கேட்டு ‘என்
சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத்விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம் இத்திருவாய்
1. இத்திருவாய்
மொழியில் வருகின்ற “தாமரை புரை கண்ணிணை” என்பது
போன்றவைகளைத் திருவுள்ளம்பற்றித் ‘தன்னழகாலும்’
என்றும், “நம்பி”
என்றதனைத் திருவுள்ளம்பற்றிக் ‘குணங்களாலும்’ என்றும், “எம்குழறு
பூவையொடும்”,
“கையிற்பாவை பறிப்பது” என்பவைகளைத்
திருவுள்ளம்பற்றித் ‘தன் செல்லாமையாலும்’ என்றும்,
“உணக்கி நீ
வளைத்தால்” என்றதனைத் திருவுள்ளம்பற்றித் ‘தாழ்ச்சிகளாலும்’ என்றும்
அருளிச்செய்கிறார்.
“புலப்பல் எனச்சென்றேன்
புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது
கண்டு”
“ஊடற்கட் சென்றேன்மன்
தோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென்
னெஞ்சு”
என்ற குறட்பாக்களும்,
“புலப்பேன்யான்
என்பேன்மன் அந்நிலையே அவர்காணின்
கலப்பேன் என்னுமிக்
கையறு நெஞ்சே”
“ஊடுவேன் என்பேன்மன்
அந்நிலையே அவர்காணின்
கூடுவேன் என்னுமிக்
கொள்கையில் நெஞ்சே”
என்ற கலித்தொகைப் பகுதியும்
இத்திருவாய்மொழியின் முன்னுரையின்
கருத்தோடு ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கன.
2. இத் திருவாய்மொழிக்கு,
இரண்டு வகையாகச் சுவாபதேசப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘இனி, இத்திருவாய்மொழி தன்னை’ என்று
தொடங்கி.
‘சேஷத்வ லக்ஷணம் அன்று’ என்றதற்குக் கருத்து, “உன்தன் திருவுள்ளம்
இடர் கெடுந்தொறும்
நாங்கள் வியக்க இன்புறுதும்” என்று இருக்கிற இவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கலத்தலைத் தமக்கு அஸஹ்பமாகச்
சொல்லுதல்
சேஷத்வத்திற்கு விரோதம் என்பது. ‘இதுவே பொருளாமித்தனை’ என்றது,
இத்திருவாய்மொழியிற்
சொல்லுகிற பிராவண்ய காரியமான
பிரணயரோஷமே சுவாபதேசத்திலும் பொருளாம் என்றபடி.
|