New Page 2
மொழியாயிருக்கும்;
இதற்கு வேறே ஒருவழி இடுவதே! ஆனபின்பு இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச்செய்தார். 1“சத்தியத்தினின்றும்
பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்றுவிடுவேன்” என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக்
கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ.
564.
மின்னிடை மடவார்கள்
நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த
மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன்
இனியதுகொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும்
கழலும் தந்து போகு நம்பீ!
பொ-ரை :-
உன்னுடைய
அருளைப் பெறுதற்குரியவர்களான மின்னல் போன்ற இடையையுடைய பெண்களுக்கு முன்னே நீ படுகின்ற துன்பத்திற்கு
நான் அஞ்சுவேன்; இராவணனுடைய காவல் அமைந்த இலங்கையை நீறாகச் செய்த மாயவனே! உன்னுடைய சுண்டாயத்தை
நான் அறிவேன்; இனி, அதனால் பெறக்கூடிய பயன் யாது? நம்பீ! என்னுடைய பந்தினையும் கழலையும்
கொடுத்துவிட்டுச் செல்வாய் என்கிறாள்.
வி-கு :-
அம்மானே! நம்பி!
மடவார்கள் முன்பு நான் அது அஞ்சுவன், சுண்டாயம் நான் அறிவன், அதுகொண்டு செய்வது என்? என்னுடைய
பந்தும் கழலும் தந்து போகு என்க. சுண்டாயம் - தன் காரியத்திலே நோக்குடைமை. விளையாட்டுமாம்.
கழல் - அம்மானை ஆடும் காய். போகு - போவாய்.
இத்திருவாய்மொழி,
ஆசிரியத்துறை.
1. பிராவண்யத்தின் மிகுதியாலே
பிரணயரோஷமாகச் சொன்ன இடம்
உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சத்தியத்தினின்றும்’
என்று தொடங்கி.
“ஏக ஏவ ரணே
வாலீ ஸரேண நிஹதோ மயா
த்வாம் து ஸத்யாத்
அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”
என்பது, ஸ்ரீராமா. கிஷ்.
30 : 82.
கிலாய்த்தல் -
பிரணயரோஷத்தைச் செய்தல்.
|