முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
92

மன

மன்னுடை இலங்கை அரண் காய்ந்த - 1நிலமிதிதான் எதிரிகள் மண்ணுண்ணும்படியாய், அதற்குமேலே “இராவணனாலே காப்பாற்றப்படுகின்ற இலங்கை” என்று கொண்டு, சிங்கம் கிடந்த முழஞ்சு போலே பையல் உணர்ந்து நோக்குகிற ஊரை அழியச்செய்த, மாயவன்-வஞ்சனை பொருந்திய செயல்களையுடையவன். ‘மன்னுடை’ என்றது, மன்னனையுடைய என்றபடி. 2‘அழகிது: ஒருமெய்யும் உண்டாகச் சொன்னீர்களே? அதனை இங்கே செய்தேனானாலோ? மேலுள்ளனவெல்லாம் ஆகைக்காக’ என்றான். 

    உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் - அது உனக்குச் செய்யலாவது செவ்வே பரிமாறும் அவர்களோடு காண்; நீ செய்கிறவையெல்லாம் பண்டே எங்களால் அறியப்பட்டவை காண்; நீ செய்கிறவையெல்லாம் ‘மெய்’ என்று இருப்பாள் ஸ்ரீஜனகராஜன் திருமகள்காண்; 3உன்னுடைய வஞ்சனையான விளையாட்டுக்களெல்லாம் நாங்கள் அறிவோம். சுண்டாயம்-தன் காரியத்தில் நோக்குடைமை. ‘அறிந்து என்? அறியாவிடில் என்? 4பிரவிருத்தமாயிற்றே’ என்றான். என்றது, ‘சாத்தியமாயிற்று அதுவன்றோ’ என்றான் என்றபடி. இனி அது கொண்டு செய்வது என் - ‘சாத்தியாம்சத்துக்கு 5ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள். அவனும் ஒன்றை நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம்தான் இல்லையோ?’ என்று கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான். என்னுடைய

 

1. நிலமிதி-நிலத்தின் தன்மை. மண்ணுண்ணல்-தோற்றுப் போதல்.

  “லங்காம் ராவண பாலிதாம்”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 39.

2. “உன்னுடைய சுண்டாயம்” என்றதற்கு, அவதாரிகை அருளிச் செய்கிறார்
  ‘அழகிது’ என்று தொடங்கி.

3. “சுண்டாயம் நான் அறிவேன்” என்பதற்கு, பொருள் அருளிச் செய்கிறார்
  ‘உன்னுடைய’ என்று தொடங்கி.

4. ‘பிரவிருத்தமாயிற்றே’ என்றது, பார்த்தலும் பார்த்துப் பேசுதலும்
  முதலானவைகள் என்னைத் தொடர்ந்தனவே என்றபடி.

5. ‘ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்றது, சம்பாஷணைகளால் பெற்ற
  பிரயோஜனம் ஒன்றும் கண்டிலோமே என்றபடி. அதாவது, புணர்ச்சி
  நடவாது என்றபடி. ‘ஒன்றை நினைத்து’ என்றது, கையில் அகப்பட்ட
  பந்தையும் கழலையும் நினைத்து என்றபடி.