முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
94

அன

அன்றோ சாஸ்திரம். 1“என்னுடைய புத்திரர்களான துரியோதனன் முதலியோர்களும், பாண்டவர்களும்” என்கிறவிடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி: “என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான், அதுவன்றோ விநாசபர்யந்தம் ஆகிவிட்டது” என்று. 2இதுதான் உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று, பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கையன்றோ உறவு அறுகையாவது. என்னுடைய பந்தும் கழலும்-3“தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே, ஒன்றை ஒன்று உபாசியாநிற்கச்செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ இரண்டு வஸ்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறபடி. 4சொரூபம் தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

 

1. அகங்கார மமகாரங்கள் அழிவிற்குக் காரணமாம் என்பதற்குச் சம்வாதம்
  காட்டுகிறார் ‘என்னுடைய’ என்று தொடங்கி.

 
“தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யயுத்ஸவ:
   மாமகா: பாண்டவாஸ்சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய”

  என்பது, ஸ்ரீ கீதை. 1 : 1.

2. இது தான், சுவாபதேசத்தில் அன்றிக்கே, அந்யாபதேசத்திலும் அழிவிற்குக்
  காரணம் என்கிறார் ‘இதுதான்’ என்று தொடங்கி.

3. உண்மை நிலையில் ‘என்னது’ என்கை உறவு அறுகையானால், உறவு
  அறாத பிரகாரம் எது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தான்
  என்றே’ என்று தொடங்கி.

  “ஆத்மேத்யேவது க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தந் நிஷ்பத்தே:”

  என்பது, வாக்யகாரர் வசனம். என்றது, இவ்வுயிரானது சர்வேசுவரனை
  வழிபடாநிற்கச்செய்தே தன்னையே வழிபட்டது என்னலாம்படியன்றோ சரீர
  சரீரி பாவத்தால் வந்த சம்பந்தம் இருக்கிறபடி. இப்படிச் சரீர பூதனாய்
  அவனுடைய அபிமானத்திலே அடங்கியவனாயிருக்கை உறவு அறாமையாம்
  என்றபடி.

4. ஆயினும், அவனுடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதனாயிருக்கும் ஆகாரம்
  தோற்றுவது ‘அடியேன்’ என்றால் அன்றோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘சொரூபம்’ என்று தொடங்கி.