தந
தந்துபோகு நம்பி-1நீ
இங்கே கால் தாழாநின்றாய்; இதற்கு ஒரு கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்;
அதற்கு முன்னே போ. முகப்பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இராநின்றீர்; கடுகப்
போகப் பாரும் என்பாள் ‘நம்பி’ என்கிறாள். 2“கண்ட காட்சி புல்லெழுந்து
போனபடியன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரியமுதலியார் பணிப்பர். 3‘என்னுடைய
பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை. ‘தந்துபோகு’
என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது. நம்பி -
4“பதினாறாயிரம் பெண்களையும் அதற்குமேலே ஒரு நூறு பெண்களையும் ஸ்ரீகிருஷ்ணபகவான்
விவாகம்செய்துகொண்டார்” என்கிறபடியே, உமக்குப் போனவிடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை
இல்லை; எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை; இனி, உம்முடைய திருக்கரங்களின் சம்பந்தமுண்டாய்ப்
பொகட்டவை கொண்டாகிலும் எங்களுக்கு ஜீவித்துக் கிடக்கவேணும்; ஆனபின்னர், அவற்றை எங்களுக்குத்
தந்துபோம். அன்றிக்கே 5“உயிரை வைத்துப்போம்” என்பாரைப்போலே
‘தந்துபோகு’ என்கிறாள் என்னுதல். என்றது, இவன் இவற்றைக் கைவிட்டுப் போகமாட்டான் என்று
அறிந்து
1. “போகு” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘நீ இங்கே’ என்று
தொடங்கி.
2. முன்பு முகப்
பழக்கம் இல்லையோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கண்டகாட்சி’ என்று தொடங்கி.
‘பெரிய முதலியார்’
என்றது, ஸ்ரீமந் நாதமுனிகளை.
3. “என்னுடைய பந்தும்
கழலும் தந்துபோகு” என்கிறவர்களுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘என்னுடைய பந்தும்’ என்று
தொடங்கி.
4. மேலே கூறிய
பொருளை விவரணம் செய்கிறார் ‘பதினாறாயிரம்’ என்று
தொடங்கி.
“ஷோடசஸ்திரீ
ஸஹஸ்ராணி சதமேகம் ததோதிகம்
தாவந்தி சக்ரே
ரூபாணி பகவாந் தேவகீஸுத:”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5.
31 : 17.
5. “தந்துபோகு” என்றதற்கு, தன்னுடைய உயிர் தரிக்கைக்காகத் தந்துபோ
என்கிறாள் என்று மேலே அருளிச்செய்து,
அவன் போகாமைக்காகத்
“தந்துபோகு” என்கிறாள் என்று வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார்
‘உயிரை வைத்து’ என்று தொடங்கி.
|