அவன
அவன் மனக்கருத்தை அறிந்தவர்கள்
ஆகையாலே ‘தந்துபோகு’ என்கிறார்கள் என்றபடி.
(1)
565.
போகு நம்பீ! உன் தாமரைபுரை
கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே
நோற்றோமே யாம்;
தோகை மாமயிலார்கள்
நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது
போயிருந்தே.
பொ-ரை :-
நம்பீ! போ; தாமரையை ஒத்த உன்னுடைய இரண்டு கண்களும் சிவந்த திருவாயிலே தோன்றுகின்ற
புன்முறுவலும் துயரத்தைச் செய்ய, அதனால் அழிவதற்கே யாம் தவம் செய்துள்ளோம்; தோகையையுடைய
சிறந்த மயில்போன்ற பெண்கள் நினது திருவருளைப் பெறுதற்குரியவர்கள், ஒலியைக் காதுகளால் கேட்டு,
அங்கிருந்து எழுந்து வரும்படியாக, பசுக்களைத் தூரத்தே போகவிட்டு, அவற்றை அழைப்பதைப் போன்று,
அங்கே சென்று இருந்து உனது வேய்ங்குழலை ஊதுவாய்.
வி-கு :-
நம்பி! போகு, கண்ணிணையும் முறுவலும் ஆகுலங்கள் செய்ய யாம் அழிதற்கே நோற்றோம்; நின்னருள்
சூடுவாராகிய தோகை மாமயிலார்கள், ஓசை செவி வைத்து எழ, ஆக்களைப் போகவிட்டுப் போய்
இருந்து குழல் ஊது என்க. ஆகுலம் - துன்பம். எழ ஊது என்க.
ஈடு :-
இரண்டாம்பாட்டு. 1நோக்குப் பெறாதவன் முகம் பார்க்கப் பெற்றான்; வார்த்தை கேட்கப்
பெறாதவன் ‘போ’ என்னவும் பெற்றான்; இனி, இதற்கும் மேற்படக் கிருதார்த்தனாகை இல்லையன்றோ.
2‘போ’ என்றால், அந்த வார்த்தையையே அன்று இவன் புத்திபண்ணுவது; அதில் அகவாயில்
ஓடுகிறதும் அறியும்
1. “போகு நம்பி” என்று
இவர்களாலே தள்ளப்பட்டவனாக இருக்க,
“தாமரைபுரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்” அவனுக்கு
உண்டாகக்
கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நோக்குப்
பெறாதவன்’ என்று தொடங்கி.
கிருதார்த்தனாதல் - பேறு பெற்றவனாதல்.
2. ஆயினும்,
“போகு” என்று தள்ளாநிற்க, கிருதார்த்தனாதல் கூடுமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘போ என்றால்’ என்று தொடங்கி.
|