முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
98

New Page 1

கும்படி. 1எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே, அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

    போகு நம்பி-“போகு நம்பி” என்று முன்பு சொல்லச் செய்தே, மீண்டும் சொல்லும்போது ஒன்று இரண்டு அடிகள் வரவிட்டுக் கிட்ட நின்றானாக வேணுமன்றோ. 2வாரீர்! எத்தனை பேரைத் தீண்டி வந்தீர் என்று தெரியாது; புடைவை படாமே கடக்க நில்லும் என்றார்கள். ‘போ’ என்ன, அருகில் வந்து நிற்கிறவன், ‘தீண்டாதே கொள்ளும்’ என்றால், என்படுமோ? நம்பி - 3எளியார் செய்வதனை நீர் செய்யக் கடவீரோ? நீர் குறைவற்றவர் அல்லீரோ? நம்பி - 4எங்கள்பக்கலிலே இப்படிக் கால் தாழ்க்க நீர் ஏதேனும் குறைவாளரோ? நாங்கள் வேண்டியிருந்ததோ உமக்கு? 5“உயிரினாற் குறையிலம்” என்று, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், தம்மை அழிக்கப் பார்த்தார்; அது அவன் உளனாகையாலே அழிந்தது இல்லை. “மாசறுசோதி” என்ற திருவாய்மொழியில், அதற்கு அடியான அவனையே அழிக்கப் பார்த்தார். இங்கு அவன் வரக்கொள்ள, ‘போ’ என்னாநின்றார். இதற்குக் காரணம் என் என்று அறிகிலோம். 6இவர்கள் இப்படி ‘நம்பி’

 

1. ஆழ்வார் பிரணயரோஷத்தாலே ஊடி “போகு” என்கிற இதனை
  அநுசந்தித்த எம்பாருடைய ஈடுபாட்டினை அருளிச்செய்கிறார் ‘எம்பார்’
  என்று தொடங்கி.
 

2. முதலில் “போகுநம்பி” என்றவாறே, வந்தான்; வந்தவனை மீளவும்
  “போகுநம்பி” என்று சொல்லுகைக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘வாரீர்’
  என்று தொடங்கி. ‘என்படுமோ’ என்றது, தீண்டிவிடுவான் என்பது குறித்து
  நின்றது.

3. “நம்பி” என்றதற்கு, பூர்ணர் என்றுபொருள் அருளிச்செய்கிறார் ‘எளியார்’
  என்று தொடங்கி.

4. “நம்பி” என்பதற்கு, மின்னிடை மடவாரால் நிறைவுற்றவர் என்று வேறும்
  ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘எங்கள் பக்கலிலே’ என்று தொடங்கி.

5. இவருடைய ஈடுபாட்டின் மிகுதியை என் என்று கூறுவது என்று
  வியாக்யாதா ஈடுபடுகிறார் ‘உயிரினால்’ என்று தொடங்கி. ‘என் என்று
  அறிகிலோம்’ என்றது, பலநாளாகப் பிரிந்திருக்கையாலே பிரணயரோஷம்
  தலை மண்டையிட்டுச் சொல்லுகிற வார்த்தையன்றோ என்றபடி.

6. “கடியன் கொடியன்” என்பது போன்று சொல்லாது, “நம்பி” என்கிற இது,
  கொண்டாட்டமாயிருக்க, உறவு அறச் சொல்லுகிற வார்த்தையோ இது,
  என்ன, ‘இவர்கள் இப்படி’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.