ப
10 |
திருவாய்மொழி - ஏழாம் பத்து |
பிள்ளை திருநறையூர்
அரையர் 1‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும், புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை
தாய் முகத்திலே விழித்துக்கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’
என்று பணிப்பர். 2‘தாவத் ஆர்த்தி:’ என்ற சுலோகத்திற்படியே, சரணம் புக்கால்
தம்மை இன்னாதாகச் சம்பந்தம் இல்லையே: அவனை இன்னாதாமித்தனை அன்றோ? 3திருமலையிலே
புகுந்து கிட்டி நின்றதுவும் இவர்க்குப் பேற்றுக்குக் காரணமாதல் தவிர்ந்து கூப்பிடுகைக்குக் காரணமாயிற்றித்தனை
அன்றோ?
663
உண்ணி லாவிய
ஐவ ராற்குமை
தீற்றி
என்னைஉன் பாத பங்கயம்
நண்ணி லாவகை யேநலி
வான்இன்னம்
எண்ணு
கின்றாய்
எண்ணி லாப்பெரு
மாய னே!இமை
யோர்கள்
ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே!
அப்பனே!
என்னை
ஆள்வானே!
பொழிப்புரை :
எண்ணிறந்த காரியங்களையெல்லாம் உண்டாக்குகின்ற
பெரிய மூலப்பகுதியைச் சரீரமாகவுடையவனே! நித்தியசூரிகளால் துதிக்கப்படுகின்ற மூன்று உலகங்களையுமுடைய
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்கின்றவனே! உள்ளே வசிக்கின்ற ஐந்து இந்திரியங்களால்
நலிவுப்படுத்தி, உன் திருவடித் தாமரைகளை நான் சேராதபடியே என்னை நலிவதற்கு இன்னம் எண்ணுகின்றாய்.
______________________________________________________________
1. பிள்ளை திருநறையூர்
அரையர் நிர்வாஹத்திற்கு, திருப்பாசுரங்களின் பின்
இரண்டு அடிகளும் குணாநுசந்தான பரமாகக்
கொள்க. மற்றைய
நிர்வாஹத்திற்குப் பின் இரண்டு அடிகளெல்லாம் வெறுப்பிலே நோக்கு.
2. அவனிடத்திலே வெறுப்புக்
கொள்வதற்கு, மூன்றாவதாக வேறும் ஒரு
காரணத்தை அருளிச்செய்கிறார், ‘தாவத் ஆர்த்தி;’ என்று
தொடங்கி.
என்றது, ‘பிரபத்தி பலியாமையாலும் இன்னாதாகிறார்’ என்றபடி. இந்தச்
சுலோகத்தையும்
பொருளையும் ஆறாம் பத்து ஈட்டின் தமிழாக்கம் 444 -
ஆம் பக்கத்திற்காண்க.
வெறுப்பிற்கு, முற்கூறிய
இரண்டு காரணங்களாவன; ‘மின்னிடை
மடவார்’ என்று தொடங்கி அருளிச்செய்ததும், ‘சம்பந்தத்தை
உணர்ந்தால்’
என்று தொடங்கி அருளிச்செய்ததுமாம்.
3.
‘அடியார்களுடைய காரியம் செய்கைக்காகத் திருமலையிலே
எழுந்தருளியிருக்க, அவனை வெறுக்கிறது என்?’
என்ன, ‘திருமலையிலே’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
|