685
104 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
685
வெள்ளைச் சுரிசங்கொடு
ஆழிஏந்தித்
தாமரைக்
கண்ணன்என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற
ஆற்றைக்காணீர்!
என்சொல்லிச்
சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச்
சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும்
விழாவொலியும்
பிள்ளைக்
குழாவிளை யாட்டொலியும்
அறாத்’திருப்
பேரெயிற் சேர்வன்நானே.
பொ-ரை : தாய்மார்களே! வெண்ணிறத்தையும் உள் சுரிந்திருத்தலைமையுடைய
ஸ்ரீபாஞ்சசன்யம் என்னும் சங்கோடு சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் ஏந்திக்கொண்டு தாமரைக்கண்ணனான
எம்பெருமான் என் மனத்திற்குள்ளே கருடப்பறவைச் செலுத்துகின்ற விதத்தைக் காணுங்கோள்; அவன்
தன்மையை என்ன வார்த்தைகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லுவேன்! பேரின்ப வெள்ளத்தையுடைய எம்பெருமான்
எழுந்தருளியிருக்கின்ற, வேதங்களின் ஒலியும் திருவிழாக்களின் ஒலியும் குழந்தைக் கூட்டங்கள்
விளையாடுகிற விளையாட்டின் ஒலியும் நீங்காமல் இருக்கின்ற திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்தை
நான் அடைவேன் என்கிறாள்.
வி-கு :
சுரிதல் - உள்ளே சுழித்திருத்தல், கடாவுதல்-ஏறிச்செலுத்தல். காணீர் -காண்கின்றிலீர் என்னலுமாம்.
வீற்றிருந்த திருப்பேரெயில் என்க. ‘ஒலியும் ஒலியும் விளையாட்டுஒலியும் அறாத்திருப்பேரெயில்’
என்க.
இத்திருவாய்மொழியில்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஈடு : முதற்பாட்டு.
2இந்தப் பிராட்டி, சொற்களால் சொல்ல முடியாதபடி தனக்கு உண்டான வியசனத்தாலே,
தென்திருப்பேரெயில் போகவேணும் என்று தனக்குப் பிறந்த நிலைய் வினவுகிற திருத்தாய்மார்க்குச்
சொல்லுகிறாள்.
_____________________________________________________________
1.
‘திருப்பேரையில்’
என்பதும் பாடம். ‘திருப்பேரெயில்’ என்பதே
கொள்ளத்தக்கது (பாசுரம் 691 பார்க்க).
2. ‘என்
சொல்லிச் சொல்லுகேன், திருப்பேரெயில் சேர்வன் நான்,
அன்னைமீர்காள்!’ என்பதனைக் கடாட்சித்து
அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|