த
106 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
திருக்கண்களைக் கூட்டுகிறது,
தோற்பித்தபடிக்கு; 1‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய
ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு. 2இவ்விடத்தே நிலாத்துக் குறிப்பகவர்
வார்த்தையை அருளிச்செய்வர் சீயர். 3கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய்
இருக்குமாறு போலே ஆயிற்று, முகத் திருக்கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.
4‘திருக்கண்டேன்
பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும்
கண்டேன்-செருக்கிளரும்
பொன்ஆழி
கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்,
என்ஆழி வண்ணன்பால்
இன்று’
என்று வடிவழகைப் போன்று
திவ்விய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகியனவாயன்றோ இருப்பன? 5ஆழ்வார்கள் தாம்
அவனைக் கைசெய்திருக்கையாலே ஆபரணகோடியிலே இருப்பார்கள். கை செய்தல் - அலங்கரித்தல்.
என் நெஞ்சினூடே-தங்கள்
நெஞ்சல் இல்லாமையாலே இது கூடாது என்று இருப்பார்கள் அன்றோ? ஆதலின், ‘என் நெஞ்சினூடே’
என்கிறாள். என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்- 6‘இவர்க்கு
மயர்வு அற மதிநலம் அருளி ‘நெஞ்சமே நீள்நகர்’ என்னும்படியன்றோ திருத்திற்று?’ ஒரு
__________________________________________________________________
1. ஆயுதம் போன்று திருக்கண்களும்
தோற்பிக்கும் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘உனக்கு’ என்று தொடங்கி, ‘ஜிதந்தே’
என்பது.
2. திவ்விய ஆயுதங்களைப்
பற்றிய பிரசங்கத்திலே, ‘சர்வேஸ்வரன் இருதோளனோ,
நாற்றோளனோ?’ என்ற சங்கைக்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இவ்விடத்தே’ என்று
தொடங்கி. என்றது, ‘நிலாத்துக் குறிப்பகவர் கேட்ட
வினாவிற்குப் பட்டர் அருளிச்செய்த
திருவார்த்தையை அருளிச்செய்வர் நஞ்சீயர்’ என்றபடி.
இதனை, மூன்றாம் பத்து
ஈட்டின் தமிழாக்கம், பக். 248ல் காண்க.
3. திவ்விய ஆயுதங்களுக்கும் திருக்கண்களுக்கும்
ஒப்பனை அழகாலும் சேர்த்தி உண்டு
என்று மூன்றாவதாக வேறும் ஒரு பாவம்
அருளிச்செய்கிறார், ‘கைக்கு’ என்று
தொடங்கி.
4. திவ்விய ஆயுதங்கள் ஆபரணம்
என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘திருக்கண்டேன்’ என்று தொடங்கி, இது, மூன்றாந்திருவந்.1.
5. ரசோத்தியாக அருளிச்செய்கிறார்,
‘ஆழ்வார்கள்’ என்று தொடங்கி. ‘ஆழ்வார்கள்’
என்றது, திவ்விய ஆயுதங்களை. கை செய்தல்-அலங்கரித்தலும்,
துணை செய்தலும்,
போர் செய்தலுமாம்.
6. ‘அணுவாக
நெஞ்சிற்கு உள் உண்டோ?’ என்ன. அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இவர்க்கு’ என்று தொடங்கி,
‘நீள்நகர்’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘ஒரு திரிபாத் விபூதியிலும்’ என்று தொடங்கி.
‘நெஞ்சமே’ என்பது, திருவாய்மொழி
3. 8:2. திரிபாத் விபூதி-பரம்பதம்.
|