முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

108

திருவாய்மொழி - ஏழாம் பத்து

'இருக்கிற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. 1இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?

    2நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே திருக்குருகைப்பிரான்பிள்ளானைக் கண்டு ‘‘ஈஸ்வரனுக்குச் சொரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச்செய்துகொண்டு போந்தது, சொரூப வியாப்தியாய் இருக்கும்; ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச்செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’ 3‘மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும், ‘மனத்தில் இருப்பவரும் புராணபுருஷரும்’ என்றும், ‘அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து’ என்றும், ‘எவர்களுடைய மனத்தில் கருநெய்தல் போன்ற நிறத்தையுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும், ‘என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.

    4
தியானத்திற்குப் பற்றுக்கோடு தெரிவிக்கும் இடங்களிலும் ‘தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு இந்தப் பரமாத்துமா தன் சொரூபத்தைக் காட்டுகிறான்’ என்கிறபடியே அவ்வடிவே ஆயிற்றுத்

_______________________________________________________________

1. ‘எல்லாரும் இருக்க, இவருடைய மனத்திலே இப்படிச் செய்வான் என்?’ என்ன,
  ‘இப்படியே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. அநுகூலருடைய மனத்தில் விக்கிரஹரூபமாக வீற்றிருப்பதற்கு ஆப்த சம்வாதம்
  காட்டுகிறார், ‘நஞ்சீயர்’ என்று தொடங்கி. தோற்ற அருளிச்செய்து-வியாக்கியானம்
  செய்து.

3. விக்கிரஹ ரூபமாகப் பரந்து இருத்தற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘மனமாகிய
  குகையில்’ என்று தொடங்கி. ‘குஹாயம்’ தைத். ஆரண். கஹ்வரேஷ்டம் புராணம்’,
  கடோபநிஷத். ‘அரவத்தமளி’ என்பது, பெரியாழ்வார் திருமொழி, 5. 2:10.

        ‘ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’

என்பது, ஸ்ரீராமா.

4. ‘விக்கிரஹம் கற்பிக்கப்பட்டது என்கிறார்களே?’ என்ன, பரமார்த்தம் என்கைக்குப்
  பிரமாணங்கள் காட்டுகிறார், ‘தியானத்திற்கு’ என்று தொடங்கி.

        ‘தஸ்யஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’

என்பது, முண்டகோபிநிடதம்.. 3. 2:3.