முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

மூன்றாந்திருவாய்மொழி - பா. 1

111

சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் - 1எனக்கு ஓடுகிற வியசனத்துக்குப் பாசுரம் இல்லை; நிலையை அறியும் ஞானம் இன்றிக்கே பழமை கொண்டாடுகின்றீர்கோள் இத்தனையன்றோ? விலக்குவதற்கு என்னைப் பின்பற்றி வருகின்றவர்களாமத்தனையோ வேண்டுவது? 2‘எங்களுக்குக் காணவும் கேட்கவும் கண்ணும் செவியும் இல்லையாகில், நீதான் செய்யப் பார்த்தது என்?’ என்ன, ‘ஹிதம் சொல்லி மீட்க நினைப்பர் இல்லாத ஊரிலே போய்ப் புகுமித்தனை அன்றோ?’ என்கிறாள் 3‘முத்தன் சனங்களின் மத்தியில் உள்ள இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே, பிரிந்தவர்கள் நினைக்க ஒட்டாத தேசம் அன்றோ?

    வெள்ளம் சுகமவன்-இன்பவெள்ளத்தையுடயவன். என்றது, ‘பிரிந்திருக்கும் நிலையிலும் கலந்திருக்கும் காலத்தில் உண்டாகிற பேரின்பம் மாறாதவன்’ என்றபடி. ‘என்றது, என்சொல்லியவாறோ?’ எனின், ‘பிரிவிலும் அரையாறு படாதபடிகாணும் கலவியில் அவன் தேக்கின பேரின்பம் இருந்தபடி’ என்பதனைச் சொல்லியபடி. ‘வெள்ளை’ என்பது பாடமானபோது, மறுவற்ற இன்பம் என்று பொருள் கொள்க. அவன் வீற்றிருந்த - 4‘இட்ட கால் இட்ட கையளாய் இருக்கிற இருப்புக்கு எதிர்த்தட்டாயிருக்கிற இருப்பு அன்றோ அது?’ என்றது, இத்தலையைத் துடிக்கவிட்டுத் தன் ஐஸ்வரியம் தோற்ற மேலான சுகத்தோடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, 5இத்தலையைத் தோற்பித்த தன் வெற்றி

____________________________________________________________________

1. ‘அன்னைமீர்’ என்பதற்கு வயது முதிர்ந்தவர்கள் என்று மேலே பொருள் அருளிச்செய்தார்; நியமிக்கன்றவர்கள் என்று கொண்டு வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார், ‘எனக்கு’ என்று தொடங்கி. ‘பழமை கொண்டாடுகின்றீர்கோள்’ என்று மேலே கூறிந்தனை விவரணம் செய்கிறார் ‘விலகுவதற்கு’ என்று தொடங்கி.

2. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘எங்களுக்கு’ என்று தொடங்கி.

3. ‘அவனே வாரானோ?’ என்ன. ‘முத்தன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். 

        ‘நோபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்’

சாந்தோக்யம். 8. 12:3.

4. ‘வீற்றிருந்த’ என்பதற்கு எதிர்த்தட்டான பொருள் அருளிச்செய்கிறார், ‘இட்டகால்’
  என்று தொடங்கி.

5. ‘வீற்றிருந்த’ என்பதற்கு, ‘அரசனாய் இருந்த’ என்று வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார், ‘இத்தலையை’ என்று தொடங்கி.