எல
|
112 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
எல்லாம் அவ்விருப்பிலே
தோற்றும்படி இருக்கிறபடி என்னுதல். 1அவன் மெய்ம்மறந்து அப்படி இருந்தால் நாமும்
மெய்ம்மறந்திருக்கவோ? நிறைவாளனாய் அவன் செருக்காலே இருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும்
இருக்கவோ? 2அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனை அன்றோ?
3 பிரிந்தால் முறை பார்த்திருக்கலாம்; விஷயத்துடனே கலந்தோமாகில் அன்றோ நாம் ஆறி
இருக்கலாவது? முறையை அழித்தாகிலும் மடலை எடுத்துக் கொண்டு போமித்தனை அன்றோ? 4‘நமக்கே
நலம் ஆதலின்’ என்னக் கடவதன்றோ?
வேத ஒலியும் -
அவன் நெஞ்சு ஒழிந்து 5பழம்புணர்ப்புக் கேளாநின்றான்காணும். என்றது, பண்டு தான்
வென்ற வெற்றி மாலைகள் கேட்கையைத் தெரிவித்தபடி. அதாவது, ‘புண்டரீகாக்ஷனே! உனக்கு வெற்றி’
என்கிற வெற்றி மாலைகளைத் தெரிவித்தபடி. விழா ஒலியும் - இவளைத் தோறிபித்ததற்கு 6நெய்யாடல்
போற்றுகிறபடி. அறா-தீர்த்தம் கொடுத்த பிற்றை நாளே திருமுளைச் சாத்தாநிற்குமத்தனை.
7சமந்தகமணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தாற் போலே,
அவர்க்கும் அடுத்து அடுத்துத் திருவிழாவாகச் சொல்லுகிறதித்தனை; பெண்மணி அன்றோ இவள்?
இவள் இருக்கிற இடம் அன்றோ மங்கள ஒலிகள் மாறிக்கிடக்கிறது? பிள்ளைக்குழா விளையாட்டு ஒலியும்
அறா-8பருவம்
__________________________________________________________________
1. 'அவன் அப்படி இருந்தால்
நீ அவனை வெறுக்காமல், ‘அவன் இருக்கும்
இடத்தைச் ‘சேர்வன்’ என்பது என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘அவன் மெய்ம்மறந்து’ என்று தொடங்கி. மெய்ம்மறந்து - நம்முடைய
வைலக்ஷண்யத்தை மறந்து. அப்படி இருந்தால் - விருப்பமில்லாமல் இருந்தால்,
மெய்மறந்து - அவனுடைய
வைலக்ஷண்யத்தை மறந்து.
2. ‘அவன் வாராதிருந்தால்
நாம் விரையலாமோ?’ எனின், ‘அவன் முறை’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. ‘அவன் முறை தப்பினானேயாகில்,
நாம் முறை தப்புவது முறையோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பிரிந்தால்’ என்று தொடங்கி.
4. ‘அப்படிச் செய்தார்
உளரோ?? என்ன, ‘நமக்கே’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். இது, பெரிய திருமொழி.
9. 3 : 9.
5. பழம்புணர்ப்பு -
பழைய வெற்றி மாலைகள்.
‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’
என்பது போன்றவைகள்.
6. நெய்யாடல் போற்றுகை - நெய்
இறைத்து விளையாடுதல்.
7. விழா அறாமல் இருத்தலைத் திருஷ்டாந்தமூலமாக
விளக்குகிறார் ‘சமந்தகமணி’
என்று தொடங்கி.
8.
‘பிள்ளைக்குமாம் விளையாட்டு’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘பருவம்
நிரம்பி’ என்று
தொடங்கி.
|