மஜ
114 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
மஜ்ஜந்தி ஜந்தவ:- கொண்டு
ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராமசரத்துக்கு அஞ்சி. 1பண்டே
கைகண்டு இருப்பது ஒன்றே தண்ணீர்தான். 2வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ? திருப்பேரெயில்
சேர்வன் நானே- 3வென்றார் இருந்த இடத்தே தோற்றார் சென்று விழுமத்தனை அன்றோ?
4தாமரைக்கண்ணன் என் நெஞ்சுனூடே அன்றோ? ஆகையாலே ‘உனக்கு வெற்றி’ என்று சென்று
விழுமத்தனையேயாம்.
(1)
686
நானக் கருங்குழல்
தோழிமீர்காள்!
அன்னையர்
காள்! அயற் சேரியீர்காள்!
நான்இத் தனிநெஞ்சம்
காக்கமாட்டேன்
என்வசம்
அன்றுஇது இராப்பகல்போய்த்
தேன்மொய்த்த
பும்பொழில் தண்பணைசூழ்
தென்திருப்
பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான்மணி
வண்ணன்கண்ணன்
செங்கனி
வாயின் திறத்ததுவே.
பொ-ரை :
நறுநாற்றத்தையுடைய கரிய கூந்தலையுடைய தோழிமீர்காள்! தாய்மார்காள்! அருகில் உள்ள சேரியில்
உள்ளவர்காள்! இந்தத் தனித்த நெஞ்சத்தினைக் காக்கமாட்டேன்; என் வசத்தில் இருப்பது அன்று;
இந்நெஞ்சமானது, இரவும் பகலும் சென்று. வண்டுகள் மொய்த்திருக்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளும்
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்திருக்கின்ற தெற்குத்திசையிலேயுள்ள திருப்பேரெயில்
______________________________________________________________
1. ‘இராமசரத்துக்கு அஞ்சி
இருக்கமோ?’ என்ன, ‘பண்டே’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. கடலை எரித்ததற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘வேலை வேவ’ என்று
தொடங்கி. இது, திருச்சந்த விருத்தம், 31.
3. ‘தான் சேருகிறது என்?
அவன் வரப் பார்த்திருந்தாலோ என்ற சங்கைக்குத்
திருப்பாசுரத்தின் முன் இரண்டு அடிகளிலே நோக்காக.
வேறும் ஒரு
விடை அருளிச்செய்கிறார், ‘வென்றார்’ என்று தொடங்கி. முன்னே கூறிய
விடை, ‘முத்தன்’ என்று தொடங்கி. மேலே அருளிச்செய்த வாக்கியம்.
பக். 111.
4. ‘அப்படித்
தான் தோற்றாளோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘தாமரைக்கண்ணன்’ என்று தொடங்கி,
‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்பது,
ஜிதந்தா.
|