உண
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
2 |
119 |
உண்டோ முறை தப்புகைக்கு
நான்? நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்தீர்களோ? உங்கள் அளவு அன்று’ என்றபடி. இத்தனி
நெஞ்சம்-உங்களில் நான் வேறுபட்டவள் ஆனாற்போலேயாயிற்று, என்னிலும் என் நெஞ்சு வேறுபட்டபடி.
என்றது, ‘சொல்லிற்றுக்கேளாத ஸ்வதந்திரமான நெஞ்சம்’ என்றபடி. 1‘அச்செயல்
அவருக்குத் தக்கதாம்’ என்று இருப்பார் நெஞ்சமும் இதற்கு ஒப்பு அன்று. காக்கமாட்டேன்- 2‘முந்துற்ற
நெஞ்சே, இயற்றுவாய் எம்மோடு நீ கூடி’ என்று இருக்குமித்தனை ஒழிய, இவளால் தடுத்து வைக்கப்
போகாதே. 3‘தாய் தந்தையர்கள் என்ன செய்வார்கள்?’ என்கிறபடியே, ஒருவரையும்
பாராதே போகாநின்றது; ஒன்று கேட்டு மீளும் அளவு அன்று; 4மீட்கலாம் அளவும் காற்கட்டிப்
பார்த்து, முடியாமையாலே கைவாங்கினமை தோற்றுகிறதுகாணும், ‘மாட்டேன்’ என்ற உறைப்பாலே.
5சம்சாரிகள் ஐம்புல இன்பங்களினின்றும் மீளமாட்டாதவாறு போலே அன்றோ, இவர்
பகவத் விஷயத்தினின்றும் மீளாமாட்டதபடி?
6‘மாட்டேன்’
என்று சொல்லுகிற இதுவார்த்தையோ? எல்லா அளவிலும் தங்கள் தங்கள் மனம் தங்கள் தங்களுக்கு
அடங்கியதாக
________________________________________________________________
1. ‘இத்தனி’ என்றதிலேயுள்ள
‘இ’ என்ற சுட்டக்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘அச்செயல்’ என்று தொடங்கி. ‘தத் தஸ்ய
ஸத்ருஸம் பவேத்’ என்பது, ஸ்ரீராமா.
சுந், 39:30. ‘என்றிருப்பர்’ என்றது, பிராட்டியினை.
2. ‘முந்துற்ற’ என்பது, பெரிய
திருவந்.1.
3. ‘’போகாதே’ என்கிறது
என்? தடுத்தால் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘தாய் தந்தையர்கள்’ என்று தொடங்கி.
‘குரவ: கிம் கரிஷ்யந்தி
தக்தாநாம் விரஹாக்நிநா’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5.18:22.
மேற்கூறியதனை விவரணம் செய்கிறார், ‘ஒன்று
கேட்டு’ என்று தொடங்கி.
4. காவேன் என்னாமல்,
‘காக்கமாட்டேன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘மீட்கலாம் அளவும்’ என்று தொடங்கி.
5. மேலதற்குச் சுவாபதேசப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘சம்சாரிகள்’ என்று தொடங்கி.
6. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘மாட்டேன்’ என்று தொடங்கி.
|