என
12 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
என்பார், ‘ஐவரால்’
என்கிறார். 1இவர்களிலே நால்வர் ஒரு முகமாய் நின்று நலிய, ஒருவர் உடலாந்தமாய்
இருந்து நலிகிறபடி. 2இரட்சகன் ஒருவனாய் இருக்க, பாதகர் ஐவராய் இருக்கிறபடி. இவை
அறிவில் பொருள்களாய் இருக்கச்செய்தே, தீங்கு செய்வதில் ஊற்றங்கொண்டு உயர்திணைப்பொருளைப்
போன்று சொல்லுகிறார் ‘ஐவரால்’ என்று. என்றது, ‘ஆத்துமா என்று ஒன்று உண்டாய்.
அதனுடைய ஞானம் சொல்லுவதற்கு வழி மாத்திரம் மனமாய். அதற்கு இவை அடிமைப்பட்டவை என்று அறிகின்றிலர்,
என்றபடி. குமை தீற்றி - நலிவுபடுத்தி. 3விடுநகம் கட்டுவாரை ‘நெகிழக்கட்டினாய்’
என்று உறுக்கிக் கட்டுவிப்பாரைப் போலே, ‘இந்திரியங்கள் தண்ணளி செய்யாமே ஒக்க இருந்து நலிவிக்கிறான்’
என்றிருக்கிறார். நலிகிற நலிவைக் கொண்டு, உயர்திணையைப் போலே சொன்னோமாகில், இவற்றின்
பக்கல் குறை உண்டோ? இவை நலிகிற போதும் இவன் இல்லாமை இலன் அன்றோ? இவைதாம் இவனுக்கு
அடங்காமல் இருப்பவையும் அன்றே? இருடீகேசன் அல்லனோ!
என்னை - 4‘பல
நீ காட்டிப் படுப்பாயோ?’. ‘இன்னங் கொடுப்பாயோ?’ என்று அவற்றின் காட்சியாலே முடியும்படியான
என்னு.
_______________________________________________________________________
1. நலியும் கிரமத்தை
அருளிச்செய்கிறார், ‘இவர்களிலே’ என்று தொடங்கி. கண், மூக்கு,
செவி, வாய் என்னும் இந்நான்கு
இந்திரியங்களும் முகத்திலே உள்ளனவாகையாலே
‘ஒரு முகமாய் நின்று’ என்றும், மெய் என்பதும்,
சரீரம் எங்கும்
பரந்திருப்பதாகையாலே ‘உடலாந்தமாய்’ என்றும் ரசோக்தியாக அருளிச்செய்கிறார்.
உடலாந்தம் - சரீரம் எங்கும் பரந்திருப்பது என்றும், மெய் இந்திரியம் என்றும்
பொருள்படும்.
2. பிள்ளை திருநறையூர்
அரையர் நிர்வாஹத்திலே பாவம் அருளிச்செய்கிறார், ‘இரட்சகன்’
என்று தொடங்கி.
3. ‘இந்திரியங்கள்
நலிகின்றன என்றவர், ‘குமை தீற்றி’ என்று சர்வேஸ்வரன்
நலிவுபடுத்துகிறான் என்பான் என்?’
என்னில், ‘விடுநகம் கட்டுவாரை’ என்று
தொடங்கி. அதற்கு விடை அருளிச்செய்கிறார். விடுநகம்
- கிட்டிக்கோல். இவை
நலிகிறபோது இறைவன் அண்மையிலிருக்கிறானாகையாலும், இருடிகேசனாகையாலே
தடுப்பதற்கு ஆற்றலுள்ளவனாகையாலும், துன்புறுத்தாதபடி செய்தல் தகுதியாயிருக்க,
அது
செய்யாமையாலே, ‘இவனே துன்புறுத்துகிறான்’ என்னலாம் என்பது
இவ்வாக்கியங்களுக்குக் கருத்து.
4. ‘பல நீ
காட்டி’ என்பது, திருவாய்மொழி. 6. 9 : 9.
|