பூத
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
2 |
121 |
பூத்த பொழிலையும்
குளிர்ந்த நீர் நிலங்களையுமுடைய தென்திருப்பேரெயில். வீற்றிருந்த- 1பரமபதத்தில்
இருப்பு அடங்கலும் தோற்றும்படி இருக்கை. 2அவ்விடம் போன்றது அன்றே இவ்விடம்?
ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற இடம் அன்றோ? அவ்விடத்தைப் போன்று இவ்விடத்தையும் திருத்திக்கொண்டிருக்கிற
இடம் அன்றோ? வானப்பிரான் - இதனால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது. தென்திருப்பேரெயில்
வீற்றிருந்த வானப்பிரான் - 3ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பை நமக்காக இங்கே இருக்கிற
உபகாரன். மணி வண்ணன்-மேன்மை இல்லையாகிலும் விட ஒண்ணாத வடிவில் பசை இருக்கிறபடி. கண்ணன்
- 4அங்குள்ளார்க்குப் படி விடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக்கொண்டு
இருக்கிறவன். ஆக, ‘மேன்மை அளவிடவோ? வடிவழகு அளவிடவோ? நீர்மை அளவிடவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.
செங்கனி வாயின் திறத்ததுவே - 5கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப்படுவாரைப்போலே,
வாய்க்கரையிலே அகப்பட்டது; 6ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ
மீளுவது? 7சிவந்து கனிந்து திருப்பவளத்தின் இடையாட்டத்தது; 8இது மீள
நினைக்கில் அன்றோ உங்கள் வார்த்தை கேட்கைக்கு அவகாசம் உள்ளது?
(2)
___________________________________________________________________
1. ‘வீற்றிருந்து’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘பரம்பதத்தில்’ என்று தொடங்கி.
2. பரம்பதத்தில் இருப்பதைக்காட்டிலும்
இங்கு இருப்பதற்கு ஆதிக்கியத்தையும்,
அதற்குக் காரணத்தையும் அருளிச்செய்கிறார், ‘அவ்விடம்’
என்று தொடங்கி.
3. ‘பிரான்’ என்றதற்கு,
வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீவைகுண்டத்தில்’
என்று தொடங்கி.
4. ‘வானப்பிரான், மணிவண்ணன்’
என்ற இரண்டனையும் கூட்டிக் ‘கண்ணன்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘அங்குள்ளார்க்கு’
என்று தொடங்கி.
5. மற்றைய உறுப்புகள்
இருக்க, ‘செங்கனிவாய்’ என்று விசேடித்ததற்கு பாவம்
அருளிச்செய்கிறார். ‘கிண்ணகத்தில்’ என்று
தொடங்கி. கிண்ணகம் - ஆற்றுப்பெருக்கு.
வாய்க்கரை-அதரம். ‘மேல்’ என்பது, தொனிப்பொருள்.
6. ‘திறத்ததுவே’ என்ற ஏகாரத்திற்குப்
பொருள், ‘ஆசைப்பட்ட’ என்று தொடங்கும்
வாக்கியம்.
7. ‘திறம்’ என்பதற்குக்
கூட்டம் என்று மேலே பொருள் அருளிச்செய்தார்.
‘இடையாட்டம்’ என்று வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார், ‘சிவந்து’ என்று
தொடங்கி.
8. ‘திறத்ததுவே’
என்ற ஏகாரத்தின் பொருள், ‘இது மீள’ என்று தொடங்கும் வாக்கியம்.
|