687
122 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
687
செங்கனி
வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர்
நீள்முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம்
கண்டுஉகந்தும்
தாமரைக்
கண்களுக்கு அற்றுத்தீர்ந்தும்
திங்களும் நாளும்
விழாவறாத
தென்திருப்
பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்குஎன்
நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும்
இழந்ததுவே.
பொ - ரை :
‘தோழீ! எனது நெஞ்சம், சிவந்த கொவ்வைக்கனி போன்ற திருவதரத்திலே ஈடுபட்டதாயும், சிவந்த
பிரகாசம் பொருந்திய நீண்ட திருமுடியிலே தங்கினதாயும், சங்கையும் சக்கரத்தையும் பார்த்து மகிழ்ந்தாயும்,
தாமரை போன்ற திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்ததாயும், மாதந்தோறும் நாள்தோறும் திருவிழாக்கள்
நடந்து கொண்டேயிருக்கின்ற தென்திருப்பேரெயில் எழுந்தருளியிருக்கின்ற நங்கள் பிரானுக்கு, நாணத்தையும்
நிறையையும் இழந்துவிட்டது,’ என்கிறாள் தலைவி.
வி - கு :
‘தோழீ! என் நெஞ்சம், திறத்ததாயும் தாழ்ந்ததாயும், உகந்தும் தீர்ந்தும் நாணும் நிறையும்
இழந்தது’ என்க. அற்றுத் தீர்தல் - அவனுக்கேயாதல், நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும்
ஒழுக்கம். ‘நிறைஎனப் படுவது மறைபிறர் அறியாமை’ என்பது, கலித்தொகை.
ஈடு : மூன்றாம்
பாட்டு. 1சேர்க்குமவள் ஒருத்தியுமேயாக, அல்லாத பங்களம் அடங்கலும் ‘நமக்கு நிலம்
அன்று’ என்று கை வாங்கின; தோழியானவள், ‘இது நமக்குப் போராதுகாண்; நெஞ்சை ஒருங்கப் பிடித்துத்
தரித்து இருக்க வேண்டாவோ?’ என்ன, ‘அந்நெஞ்சுதான் இனிச்செய்வது என்? அவயவம் முதலியவற்றின்
சோபைகளிலே அகப்பட்டு அதுவும் தனக்குள்ளது அடங்கலும் இழந்ததுகாண்!’ என்கிறாள்.
__________________________________________________
1. மேல் திருப்பாசுரத்தில்
எல்லாரையும் விளித்தவள், இத்திருப்பாசுரத்திலே
ஒருத்தியை விளிப்பதற்குக் கருத்து அருளிச்செய்யாநின்ற்
கொண்டு,
‘தோழி, என் நெஞ்சமெ நாணும் நிறையும் இழந்தது’ என்றதனைத்
திருவுள்ளம் பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார். பங்களம்-கூட்டுப்படை.
|