New Page 1
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
3 |
123 |
‘செங்கனி வாயின் திறத்ததாயும்,
செஞ்சுடர் நீண்முடி தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும், தாமரைக்கண்களுக்கு அற்றுத்
தீர்ந்தும், நெஞ்சும் நாணும் நிறையும் இழந்ததுகாண்!’ என்கிறாள். 1சௌபரி என்பான்
ஒருவன் ஒரு நல்வினை அடியாக ஐம்பது வடிவு கொண்டான் அன்றோ? அவ்வளவு அன்றே, இவள் கலந்த விஷயம்
செய்ய வல்லது? அன்றிக்கே, 2‘‘ஒரு பிரகாரமாக ஆகிறான், மூன்று பிரகாரமாக ஆகிறான்’
என்கிறபடியே, அனுபவியாநின்றால் பிறக்கும் நாநா பாவம், பிரிவிலே நெஞ்சுக்கு உண்டாகாநின்றது,’
என்னுதல். 3‘திருப்பாற்கடல் கடைகிற காலத்தில் தான் எட்டு வடிவு கொண்டாற்போலேகாணும்,
இதுவும் விஷயத்திற்குத் தகுதியாகப் பல வடிவு கொள்ளுகிறபடி,’ என்னுதல். 4அவனுடைய
ஐஸ்வர்யமடைய இதற்கு உண்டாகக்கடவதன்றோ? அன்றிக்கே, 5‘அவன் உருவந்தோறும் நிறைந்து
வசிக்குமாறு போலேயாயிற்று, இதுவும் அவயந்தோறும் தனித்தனி அகப்பட வல்லபடி’
____________________________________________________________________
1. ‘நெஞ்சமெ ஒன்றே பல
அவயங்களை அனுபவிக்கக் கூடுமோ?’ என்ன, ‘பல
வடிவு கொள்ளகையாலே கூடும்’ என்னுமதனைத் திருஷ்டாந்தத்தோடு
அருளிச்செய்கிறார், ‘சௌபரி’ என்று தொடங்கி. முதற்பத்து ஈட்டின் தமிழாக்கம்
அவதாரிகை,
பக். 32. காண்க.
2. பல வடிவுகள் கொண்டதற்கு
வேறும் ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘ஒரு
பிரகாரமாக’ என்று தொடங்கி. ‘ஸ ஏகதாபவதி த்ரிதாபவதி’
என்பது, சாந்தோக்யம்,
7:26. நாநா பாவம்-பல சரீரங்களை மேற்கோடல்.
3. பல வடிவுகள் கொள்ளவதற்கு
வேறும் ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
‘திருப்பாற்கடல்’ என்று தொடங்கி, வடிவு எட்டு:
‘ஓருரு வேற்பைத் தரித்தது
தானவர் உம்பர்உள்ளாய்
ஈருரு நின்று கடைந்தது
வேலை யிதனிடையோர்
பேருரு இன்னமு தோடே
பிறந்தது பெண்மை கொண்டோர்
நாருரு நின்ற தரங்கா!
இது என்ன நற்றவமே?’
என்பது, திருவரங்கத்து மாலை.
இப்பாசுரத்திற்கூறப்பட்ட ஐந்து வடிவோடு, வாசுகி மந்தரம் இவற்றுக்கு அந்தரியாமியாய் நின்ற
வடிவு இரண்டு; உபேந்தினாய் நின்ற வடிவு ஒன்று: ஆக, மூன்றதனையும் கூட்டிக் காண்க.
4. ‘அவன் சத்தி இந்த நெஞ்சுக்கு
உண்டாகக் கூடுமோ?’ என்ன, ‘அவனுடைய’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
5. ‘பல வடிவுகள்
கொள்ளாவிடினும், பல அவயவங்களிலே அகப்படக்கூடும்’
என்னுமதற்குத் திருஷ்டாந்தத்தோடு வேறும்
ஒரு பரிஹாரத்தை அருளிச்செய்கிறார்,
‘அவன்’ என்று தொடங்கி.
|