இழந
126 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
இழந்ததுவே - 1இது
இழவாதது உண்டோ! 2அரைக்கணம் அவன் பேர நின்று படுத்தின பாடு எல்லாம் என்தான்!
நான், தன்னை இழந்தேன்: தாய்மார் தோழிமார்கள், என்னை இழந்தார்கள்: நெஞ்சு, நாணும் நிறையும்
இழத்தது.
(3)
688
இழந்தஎம் மாமைத்
திறத்துப்போன
என்நெஞ்சி
னாருமங் கேஒழிந்தார்
உழந்தினி யாரைக்கொண்
டென்உசாகோ!
ஓதக் கடல்ஒலி
போலஎங்கும்
எழுந்தநல் வேதத்து
ஒலிநின்றுஓங்கு
தென்திருப்
பேரெயில் வீற்றிருந்த
முழங்குசங் கக்கையன்
மாயத்துஆழ்ந்தேன்
அன்னையர்
காள்! என்னை என்முனிந்தே.
பொ - ரை: ‘முன்னரே இழந்த என்னுடைய மாமை நிறத்தை
மீட்டு வருவதற்காகச் சென்ற என்னுடைய நெஞ்சினரும் அங்கேயே தங்கிவிட்டார்; இனி வருந்த யாரைக்கொண்டு
எதனை உசாவுவேன்? அலைகளையுடைய கடல் ஒலி போன்று, எல்லா இடங்களிலும் உண்டான சிறந்த வேதங்களின்
ஒலியானது நின்று உயர்கின்ற தென்திருப்பேரெயில் எழுந்தருளியிருக்கின்ற. ஒலிக்கின்ற ஸ்ரீபாஞ்சஜன்யம்
என்ற சங்கைக் கையிலே தரித்த எம்பெருமானது மாயத்திலே ஆழ்ந்தேன்; அன்னையர்காள்! என்னைக்
கோபிப்பதனால் பயன் யாது?’ என்கிறாள்.
வி - கு:
நெஞ்சினார்-உயர்வுப் பொருளது. உசாவுதல்-ஆராய்தல். ‘என்னை முனிந்து என்?’ என்க. மாயம்-ஆச்சரியமான
குணங்களும் செயல்களும்.
ஈடு: நான்காம்
பாட்டு. 3‘ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருந்தியாகிலும் போது போக்காதே இங்ஙனே செய்யலாமோ?’
என்று பொடிகிற தாய்மாரைக் குறித்து, ‘என் நெஞ்சம் அவனாலே கொள்ளை கொள்ளப்பட்டது; நான்
எதனைக்கொண்டு போது போக்குவது?’ என்கிறாள்.
______________________________________________________________
1. ‘நாணும் நிறையும்’ என்னும்
இரண்டனைக் கூறியது, நிறம் முதலானவற்றிற்கும்
உபலக்ஷணம் என்று கொண்டு, பாவம் அருளிச்செய்கிறார்,
‘இது இழவாதது’
என்று தொடங்கி.
2. கணநேரம் அவன் பிரிந்திருந்த
பிரிவால் தான் பட்டபடிகளைச் சொல்லி
ஈடுபடுகிறாள், ‘அரைக்கணம்’ என்று தொடங்கி.
3. ‘என் நெஞ்சினாரும்
அங்கே ஒழிந்தார்; உழந்து இனி யாரைக் கொண்டு என்
உசாகோ?’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|