இழந
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
4 |
127 |
இழந்த எம் மாமைத் திறத்துப்
போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் - 1‘நாணும் நிறையும் இழந்தது என்ற இடம்,
நிறத்திற்கும் உபலக்ஷணமன்றோ? ஆதலால், அநுபாஷணத்திலே நிறம் இழந்ததையும் தோற்றச் சொல்லாநின்றாள்.
‘அத்தலையில் உள்ளனவற்றை முழுவதையும் நாம் நமக்கு உரித்தாகச் செய்கை போய். நமக்கு உள்ளனவற்றிலே
ஒன்றினைச் சிலர் கொடுபோகையாவது என்?’ என்று செருக்குக் கொண்டு ‘இப்போதே மீட்டுக் கொடு
வருகிறேன்’ என்று விரைந்து சென்ற மனமும் அங்கே படையற்றது. என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார்
- அங்கே 2புக்காரையும் தம்படியாக்கிக்கொண்டார். ‘பிரியேன்’ என்று சொன்னவர்
அன்றோ இத்தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்? ‘நெஞ்சினார்’ 3அலைந்த
பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியாநின்றாராயிற்று. 4‘தூசித்தலையில்
வியாபரிப்பேன் நான்’ என்றான் அன்றோ ஸ்ரீவிபீஷணாழ்வான்? இழந்த எம் மாமைத் திறத்துப்
போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் - 5நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய
மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார். 6வினைத்தலையிலே
படை
_________________________________________________________________
1. ‘மேல் திருப்பாசுரத்தில்
நிறம் இழந்தமை சொல்லிற்றோ இப்போது
அநுபாஷிகைங்கு?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘நாணும் நிறையும்’
என்று தொடங்கி. மாமைத்திறம் - மாமை நிமித்தமாக. அநுபாஷணம் - பின்
மொழிதல். படையற்றது - கிட்டிற்று.
2. புக்காரையும் - புக்க
மனத்தினையும், ‘தம் படி’ ஏது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘பிரியேன்’ என்று தொடங்கி.
3. ‘நெஞ்சினார்’ என்ற
உயர்வுப் பன்மைக்கு பாவம் அருளிச்செய்கிறார்; அலைந்த’
என்று தொடங்கி. அணுக்கடித்தல் - அந்தரங்கமாதல்.
4. இது அணுக்கடித்துத் திரிந்தமைக்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘தூசித்தலையில்’
என்று தொடங்கி. ‘ப்ரவேஷ்யாமி ச வாஹிநீம்’
என்பது, ஸ்ரீராமா. யுத். 19:23.
தூசித்தலை - படையின் முன்னிடம்.
5. ‘திறம்’ என்பதற்குக்
கூட்டம் என்று பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றிப்
பதப்பொருள் அருளிச்செய்கிறார்,
‘நிறம் தொடக்கமாக’ என்று தொடங்கி.
6. ‘அங்கே
புக்காரையும் தம்படியாக்கிக்கொண்டார்’ என்கைக்கு, ‘உன் காரியத்துக்காகப்
போன மனம் அவன்
வார்த்தை கேட்கைக்குக் காரணம் என்?’ என்ன,
‘வினைத்தலையிலே’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
வினைத்தலை - போர்த்தலை. படையறுத்தல் - எதிர்த்தலையில் சேனையைத்
தன்
வசமாக்கிக்கொள்ளுதல்.
|